உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., சீனா போன்று நாங்களும் அணு ஆயுத சோதனை நடத்தப் போகிறோம்; டிரம்ப் தடாலடி

பாக்., சீனா போன்று நாங்களும் அணு ஆயுத சோதனை நடத்தப் போகிறோம்; டிரம்ப் தடாலடி

வாஷிங்டன்: பாகிஸ்தானும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. நாங்களும் அதை நடத்த போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்காவில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு டிரம்ப் பேட்டி அளித்தார். 33 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க அணு ஆயுத சோதனையை துவங்குகிறது. அதற்கு என்ன காரணம் என்பதையும் பேட்டியின் போது அவர் வெளியிட்டு உள்ளார். பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது; பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுத சோதனையை நடத்துகின்றன. ஆனால் அவர்கள் இதை பேச மாட்டார்கள். நாங்கள் வேறுபட்டவர்கள் என்பதால் இதை (அணு ஆயுத சோதனையை குறிப்பிடுகிறார்) பேசுகிறோம். மக்களுக்கு என்ன நிகழ்கிறது என்பது தெரியாதவாறு, அவர்கள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனையை மேற்கொள்கின்றனர். நீங்கள் சிறிதளவு மட்டுமே அதிர்வுகளை உணர்கிறீர்கள். உலகளாவிய கண்காணிப்புகள் இருந்தாலும், இத்தகைய அணு ஆயுத சோதனைகளை மறைமுகமாக நடத்த முடியும். நாங்களும் இந்த சோதனையை (அணு ஆயுதம்) நடத்த இருக்கிறோம். ஏன் என்றால் அவர்கள் (பாக். சீனா, வடகொரியா, ரஷ்ய நாடுகளை குறிப்பிடுகிறார்) நடத்துகின்றனர். அவர்கள் சோதனை செய்வதாலும், மற்றவர்கள் சோதனை செய்வதாலும் நாங்களும் சோதனை செய்ய இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறேன், வடகொரியாவும் சோதனை செய்து வருகிறது, பாகிஸ்தானும் சோதனை செய்து வருகிறது. இந்த நாடுகள் எங்கு சோதனை நடத்துகின்றன என்பது அமெரிக்காவுக்கு தெரியாது. ஆனால் சோதனையை அவர்கள் நடத்துகிறார்கள்.சோதனை செய்யாத ஒரேநாடு அமெரிக்கா தான். சோதனை செய்யாத ஒரே நாடாக நாங்கள் இருக்க விரும்பவில்லை. மற்ற நாடுகளின் சோதனை காரணமாக, நாங்களும் சோதனை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன். அந்த செயல்முறை உடனடியாக தொடங்கும். இவ்வாறு தமது பேட்டியில் டிரம்ப் கூறி இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

m.arunachalam
நவ 03, 2025 21:35

அறிவும், அறிவியலும். அழிவுக்கு துணைபோகின்றன சந்தேகமில்லாமல். கல்விக்கூடங்களும், பல்கலைக்கழகங்களும் எதை கற்பிக்கின்றன?. தெளிதல் நலம்.


Barakat Ali
நவ 03, 2025 21:30

ஏதே ???? எட்டு போரை நிறுத்தினவரு பேசுற பேச்சா இது ????


ஜெய்ஹிந்த்புரம்
நவ 03, 2025 20:06

வட கொரியாவை விட்டு விட்டார். சிறந்த நண்பர் என்பதாலா?


ManiK
நவ 03, 2025 19:38

தீபாவளிக்காக பட்டாசு வெடிச்சா புகை, மாசு ஏற்படும் அதனால எல்லாரும் உலக நன்மைக்காக அணு ஆயுத சோதனை நடத்துங்க... அப்பதான் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்...


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
நவ 03, 2025 19:15

அமெரிக்க தத்தி?


ஜெய்ஹிந்த்புரம்
நவ 03, 2025 20:08

டியர் பிரெண்டுன்னு சொன்னீகளே?


GMM
நவ 03, 2025 19:14

அமெரிக்கா அதிபர் டிரம்ப் அய்யா அணு ஆயுத ரகசியம் மர்மமாக பரவி விட்டது. இனி அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா அணு ஆயுத செயல் இழப்பு தொழில் நுட்பம் அறிந்தால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும். அல்லது ஏவிய இடம் திரும்பி வெடிக்க செய்ய வேண்டும். அமெரிக்கா அணுகுண்டு தயாரித்தாலும் பயன் இருக்காது. சரியா.


chandran
நவ 03, 2025 18:28

மொதல்ல அவன நிறுத்த சொல்டா என சொல்றாரோ பெரியண்ணன்


Sivagiri
நவ 03, 2025 18:03

என்னமோ இது வரை அவுங்கள பாத்துதான் செஞ்சாய்ங்களாக்கும் ? . .


Sun
நவ 03, 2025 17:06

உனது பங்காளி பாகிஸ்தான் ராணுவ தளபதியை கூப்பிட்டு வெள்ளை மாளிகையில் திரும்பவும் ஒரு விருந்து கொடு. இனி நீ அணு ஆயுத சோதனையே நடத்தாமல் இருந்தாலும் இதை நீ சொன்னதற்காக இந்த ஜென்மத்தில் உனக்கு இனி நோபல் பரிசு கிடையாது.


சுந்தர்
நவ 03, 2025 16:22

நடத்துங்க நடத்துங்க ட்ரம்ப். ஆனா போரை நிறுத்திட்டேன் நிறுத்தப் போறேன்னு சொல்லாதீங்க...ம்ம்ம்... இப்ப உலகத்திற்கு பல நல்ல தலைவர்கள் தேவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை