உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிந்து - முஸ்லிம் இடையே பிரிவினை ஏற்படுத்துவதே பாகிஸ்தானின் நோக்கம்: ஓவைசி

ஹிந்து - முஸ்லிம் இடையே பிரிவினை ஏற்படுத்துவதே பாகிஸ்தானின் நோக்கம்: ஓவைசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியாத்: இந்தியாவில் ஹிந்து - முஸ்லிம் பிரிவினைவாதத்தை தூண்டுவதே பாகிஸ்தானின் முதன்மை நோக்கம் என்று அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவுடன் அரபு நாடுகளுக்கு சென்றுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் ஓவைசி, சவுதி அரேபியாவில் பாகிஸ்தானின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bfftmois&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பேசியதாவது; அரபு நாடுகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையே, பாகிஸ்தான் தவறான செய்திகளை பரப்பி வருகிறது. நாம் முஸ்லிம் நாடு, இந்தியா முஸ்லிம் நாடு அல்ல என்று. ஆனால், இந்தியாவில் 24 கோடி பெருமைமிக்க முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். அதேபோல, உலகில் உள்ள முஸ்லிம் பேரறிஞர்களை விட இந்தியாவில் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சிறந்த அரபு மொழியை பேசி வருகின்றனர். பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என்பதால், இந்தியா முஸ்லிம்களை ஒடுக்குவதாக போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர். மே 9ம் தேதி என்ன நடந்தது தெரியுமா? 9 விமானப் படை தளங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. இந்தியா நினைத்திருந்தால், விமானப்படை தளங்களை முற்றிலுமாக அழித்திருக்க முடியும். ஆனால், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 9 பயங்கரவாத முகாம்களின் தலைமையகம் தாக்கி அழிக்கப்பட்டது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குவதை தடுக்க பாகிஸ்தானை மீண்டும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் வைக்க வேண்டும். பாகிஸ்தானின் படை தளபதியாக அசிம் முனிர் நியமிக்கப்பட்ட போது, அமெரிக்காவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட முகமது எஷானுடன் கைகுலுக்கும் போட்டோ வெளியாகியது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இணக்கமாக செயல்படுவது குறித்த ஆதாரங்கள் உள்ளன. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் ஹிந்து - முஸ்லிம்களிடையே மோதலை உண்டாக்குவதே பாகிஸ்தானின் முழுநேர பணியாக உள்ளது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
மே 30, 2025 11:05

இவர் திடீரென நல்லவர் ஆகி விட்டது தான் சந்தேகத்தை அதிகமாக்குகிறது!


Raj S
மே 30, 2025 01:58

இதைத்தான் இவ்வளவு நாளா திருட்டு திராவிடனும், கான் கிராஸ் கட்சியும் செஞ்சுகிட்டு இருக்கானுங்க...


ஜெய்ஹிந்த்புரம்
மே 29, 2025 21:13

மதங்கள் அனைத்துமே மக்களை பிரித்து வைத்து அடக்கும் சூழ்ச்சி தான் என்பதை பகுத்தறிவால் அறியலாம். பகுத்தறிவை வளர்க்கவிடாமல் செய்வதே மதங்களின் நோக்கம். அவர்களின் உருட்டுகளை ஒருமுறை ஆராய்ந்து கேட்டாலே போதும். புரிந்து கொள்ளலாம்.


அப்பாவி
மே 29, 2025 19:30

இல்லேன்னா ஓவைசி எல்லோரோடயும் இணக்கமா போய்டுவாரு ?...


Sivagiri
மே 29, 2025 19:09

ஐயாவுக்கு ஒரு சென்ட்ரல் மினிஸ்டர் போஸ்ட் பார்சல் . . ? .


Madras Madra
மே 29, 2025 17:51

பாகிஸ்தான் பலவீனம் வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது இனி இந்தியாவுக்கு சொம்பு அடிச்சதான் பிழைப்பு இவரை போன்றவர்களுக்கு


சிந்தனை
மே 29, 2025 17:44

முஸ்லிம்களின் லட்சியமே தான் செல்லும் நட்டை கைப்பற்றுவதுதான் அந்த நாட்டு பூர்வீக மக்களை அடிமையாக்கி விட்டு துரத்திவிட்டு உலக வரலாறு அப்படித்தான் நிரூபிக்கிறது ஒருவேளை தமிழ்நாட்டு... இந்திய... முஸ்லிம்கள் உத்தமபுத்திரர்களாக இருக்கலாம்... ஆனால் இந்திய வரலாறும்...


சாமானியன்
மே 29, 2025 17:42

உண்மை என்னவெல்லாம் கஷ்டத்தை கொடுக்கப் போகின்றதோ ?


மூர்க்கன்
மே 29, 2025 16:29

ஷாமோடி..


vivek
மே 29, 2025 17:14

மூர்க்க கொத்தடிமை சாம்பிராணி


Barakat Ali
மே 29, 2025 13:49

போலீசு அரைமணி நேரம் கையைக் கட்டிக்கிட்டு சும்மா இருந்துட்டா ஹிந்துக்களை முடிச்சு உட்டுருவோம் ன்னு சொன்னது யாரு ராசா ????


சமீபத்திய செய்தி