உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் சொல்வது பொய்; மறுத்தது ஆப்கன் அரசு!

பாகிஸ்தான் சொல்வது பொய்; மறுத்தது ஆப்கன் அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: இந்தியா பாகிஸ்தான் இடையே இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 'எங்கள் மீது குறிவைத்து இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு' என்று ஆப்கானிஸ்தான் மறுத்தது.இந்தியா -பாகிஸ்தான் இடையிலான போர், இன்று 10ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக, இன்று அதிகாலை பேட்டி அளித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், 'இந்திய ஏவுகணை, ஆப்கானிஸ்தானை தாக்கியதாக' குற்றம் சாட்டியிருந்தார். பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை ஆப்கன் ராணுவ செய்தி தொடர்பாளர் இனயத்துல்லா கவாரிஸ்மி, மறுத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ztimn91&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து இனயத்துல்லா கவாரிஸ்மி கூறியதாவது: எங்கள் மீது தாக்குதல் குறித்து பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளில் நம்பகத்தன்மை, எந்த உண்மையும் இல்லை என்று கூறினார்.இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், 'இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் அபத்தமானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல முறை ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்திய நாடு எது என்பதை ஆப்கன் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்றார்.போர் நிறுத்தம்இவ்வாறு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தரப்பினர் கூறிய நிலையில், இன்று மாலை 5 மணியுடன் இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அமல் செய்வதாக அறிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சகீல்
மே 11, 2025 09:18

தாலிபான் நமது நண்பன்...


canchi ravi
மே 11, 2025 06:21

உண்மை பேசத்தெரியாத நாடு பாக்


Padmasridharan
மே 11, 2025 00:56

பொய் சொல்றாங்கன்னு தெரிஞ்சும் அவங்க கிட்ட பேச்சுவார்த்தை நடத்துறாங்கன்னா இனி எதிர்காலம் தேர்தல்_வோட்டு எப்படி இருக்கும்


RAMAKRISHNAN NATESAN
மே 10, 2025 22:40

ஆப்கன் மீதும் இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக பன்றிஸ்தான் பொய்ப்பிரச்சாரம் .... தாலிபன் அரசே இதை மறுத்துள்ளது ..... .எப்படி மத ரீதியா கூட்டாளி சேர்க்கிறான் பாருங்க .....


Barakat Ali
மே 10, 2025 22:25

காமெடி செய்திருக்கிறது பக்கிஸ்தான் ......... இனிமே தாலிபன் இவனை ஒரு துளி அளவு கூட மதிக்க மாட்டான் ....


K V Ramadoss
மே 10, 2025 19:47

நான்கு பக்கமும் யாரும் னுதாபிகள் இல்லாத நிலையிலும், பாலுஜிஸ்தான் கையை விட்டு போய்விடும் என்ற நிலையிலும், மேலும் இந்தியாவின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்கமுடியாது இனி, என்று அப்பட்டமாக தெரிந்த நிலையிலும், பாகிஸ்தான் ஓடோடிப்போய் அமெரிக்காவிடம் சரணடைந்தது. டிரம்ப் வழக்கம்போல் தனக்கு சாதகமாக அறிவிப்பு செய்துவிட்டார், போர் நிறுத்தம் பற்றி. பாகிஸ்தான் பிறகு இந்தியாவிடமும் சரணடைந்து போர்நிறுத்தம் வேண்டும் என்று கெஞ்ச இந்தியா மிகவும் தாராள உள்ளத்துடன் அதற்கு சம்மதித்திருக்கிறது. ஆனால் அதற்கான விலையை பாகிஸ்தான் தந்தாக வேண்டும். இந்தியா 12-ந்தேதி அதை வற்புறுத்தத்தான் போகிறது.


புதிய வீடியோ