உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!

போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: போர் பதற்றம் எதிரொலியாக பெட்ரோல், டீசல் நிலையங்களை 48 மணி நேரத்திற்கு பாகிஸ்தான் அரசு மூட உத்தரவிட்டுள்ளது.எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. அவை அனைத்தையும் நடுவானில் மறித்து நம் ராணுவம் சுக்குநுாறாக்கியது. எனினும், ஜம்மு காஷ்மீரில் சீக்கிய குருத்வாரா, கிறிஸ்துவ சர்ச், பொதுமக்களின் வீடுகள் ஆகியவை பாகிஸ்தான் தாக்குதலில் சேதம் அடைந்தன. இந்நிலையில் பாகிஸ்தானின் விமான நிலையங்கள், ராணுவ தளங்களை இந்திய ராணுவத்தினர் குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இந்திய பாதுகாப்பு படையினர் நடத்தும் துல்லிய தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. பெட்ரோல் நிலையங்களை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் இருக்கும் அனைத்து பெட்ரோல், டீசல் நிலையங்களையும் 48 மணி நேரத்திற்கு மூடும்படி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.போர் நிறுத்தம்இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
மே 10, 2025 14:20

பெட்ரோல் டீசல் இல்லை என்றால் காரில் அல்லது பேருந்தில் கூட தப்பி ஓட முடியாது. கழுத்தை வண்டியில்தான் தப்பிக்க முடியும். ஈரானுக்கோ, சீனாவுக்கு, ஆப்கானிஸ்தானுக்கோ எங்கு போனாலும் பாகிஸ்தானிகளை அடிப்பார்கள்.. தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்.


Ramesh Sundram
மே 10, 2025 15:10

அதே பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு வந்தால் சிகப்பு கம்பள வரவேற்பு மற்றும் ரேஷன் கார்டு voter id passport எல்லாம் கொடுத்து வாழ வைப்போம் அவர்கள் இந்தியா வந்தவுடன் அவர்கள் ஜாதி புத்தியை காண்பித்து விடுவார்கள் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் இங்கே நமது கழகம் குஷி ஆகி விடும் என் என்றால் ஒட்டு அரசியல்


TRE
மே 10, 2025 12:45

மலக்காரர பார்த்து மெதுவா ஊதுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை