உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் முடிந்தும் அமைதி திரும்பவில்லை: காசாவில் உள்நாட்டு சண்டையில் 32 பேர் பலி

போர் முடிந்தும் அமைதி திரும்பவில்லை: காசாவில் உள்நாட்டு சண்டையில் 32 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம் : போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையிலும், காசாவில் வெடித்த உள்நாட்டு சண்டையில் 32 பேர் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றம் தொடர்கிறது.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது.இந்நிலையில் அப்போர் அமெரிக்கா முன்மொழிந்த அமைதி திட்டத்தின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இனி, போர் இன்றி நிம்மதியாக வாழலாம் என்ற மகிழ்ச்சியில் இருந்த காசா மக்கள் தலையில் இடி விழுந்தது போன்றதொரு சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கும், காசாவின் செல்வாக்கு மிக்க ஆயுதமேந்திய குழுவான டக்முஷ் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே சப்ரா என்ற பகுதியில் கடும் மோதல் ஏற்பட்டது.இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், டக்முஷ் பிரிவைச் சேர்ந்த 19 பேர் உட்பட, 32 பேர் கொல்லப்பட்டனர். இம்மோதலில் ஹமாஸ் ஆதரவு சமூக ஊடக பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.டக்முஷ் பிரிவினர், காசாவில் நீண்டகாலமாக ஹமாசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த காலங்களில் இருதரப்பிடையே பலமுறை மோதல் நடந்து வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இரண்டு ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கவும், குறிப்பிட்ட பகுதியை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் ஹமாஸ் இந்த மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.வெடிகுண்டு சத்தமும், துப்பாக்கிச் சத்தமும் இன்றி இனி நிம்மதியாக வாழலாம் என நிம்மதி பெருமூச்சு விட்ட காசா மக்களுக்கு, உள்நாட்டு வன்முறை பேரிடியை தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramona
அக் 15, 2025 07:29

அவங்களுடைய தலை விதி, வாழ வேண்டிய வயதில் வாழாமல் இப்படி இறப்பது ,துயரங்கள்தான் வாழ்க்கை யாகிவிட்டது, காரணம் பொறுமை சகிப்புத்தன்மை, இரக்கம், இவை இல்ல என்றால் ஒன்றும் செய்ய முடியாது..


Ramaraj P
அக் 15, 2025 07:18

இஸ்ரேலுக்கு எதிராக கூட்டம் போட்ட தற்குறிகள் இப்போது இந்த தீவிரவாத செயலுக்கு என்ன சொல்லுமோ


rama adhavan
அக் 15, 2025 06:03

என்ன செய்வது, சண்டை இதுவது பிறவிக் குணம் ஆகி விட்டதோ?


RK
அக் 15, 2025 04:40

இதுதான் அமைதியோ அமைதி மார்க்கம்.


ராமகிருஷ்ணன்
அக் 15, 2025 04:11

டிரம்புக்கு மீண்டும் வேலை வந்து விட்டது, ஆனால் இந்த குரூப்புகள் டிரம்பு பேச்சை கேட்க மாட்டார்கள்.


N Sasikumar Yadhav
அக் 15, 2025 02:50

அமைதியை விரும்பாத ஒரே மார்க்கம் இந்த அமிதி மூர்க்கம் மட்டுமே


Ramesh Sargam
அக் 15, 2025 02:06

டிரம்ப் அவர்களால் இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரைத்தான் நிறுத்தமுடியும். உள்நாட்டு சண்டைகளை நிறுத்தச்சொன்னால், அவர் தான் அதிபராக பதவி வகிக்கும் அமெரிக்காவுக்கு ஒன்றுமே செய்யமுடியாது. இப்ப மட்டும் என்னத்த செஞ்சிட்டார் என்று யாரோ முனுமுனுப்பது என் காதில் விழுகிறது.


Ravi Manickam
அக் 15, 2025 00:02

மவுன்ட் ரோடு பாய்ஸ் இதற்கும் மோடிதான் காரணம் என்று promise king தலைமையில் கத்துவானுங்க. மூன்று ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் பாவ பிரச்சனை இது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை