உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வளர்ந்த நாடுகளில் ஜனநாயக செயல்பாடு மீது மக்கள் அவநம்பிக்கை: சர்வே முடிவில் அதிர்ச்சி தகவல்

வளர்ந்த நாடுகளில் ஜனநாயக செயல்பாடு மீது மக்கள் அவநம்பிக்கை: சர்வே முடிவில் அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: செல்வ செழிப்புள்ள 12 நாடுகளில் ஜனநாயகம் செயல்படும் விதத்தில் 65 சதவீதம் பேர் அதிருப்தியில் உள்ளதாக, சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் பி.இ.டபிள்யூ., ஆராய்ச்சி மையம், கடந்த 2017ம் ஆண்டு முதல் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய 12 செல்வசெழிப்புள்ள நாடுகளில் ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் பார்வை எவ்வாறு உள்ளது என்று ஆய்வு செய்து வருகிறது. அந்த ஆய்வின் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.குறிப்பிட்ட இந்த 12 நாடுகளில் பொதுமக்கள் 65 சதவீதம் பேர், ஜனநாயகம் செயல்படும் விதத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 35 சதவீதம் பேர் மட்டுமே, ஜனநாயக செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.கடந்த 8 ஆண்டுகளில், ஜனநாயகத்தின் செயல்பாட்டில் மக்களின் ஒட்டுமொத்த திருப்தி குறைந்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.2017ம் ஆண்டில், இந்த நாடுகளில் உள்ள பெரியவர்களில் 49 சதவீதம் பேர் தங்கள் ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் திருப்தி அடைந்தனர்.அதே நேரத்தில் அதே அளவு 49 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை. கோவிட் தொற்றுநோய் காலத்தில் மக்கள் மனநிலை, ஜனநாயக செயல்பாடு பற்றி திருப்தி நிலைக்குத் திரும்பியது. ஆனால் அதன் பின்னர் மேலும் குறைந்துவிட்டது.ஐரோப்பாவில் ஜனநாயகத்தின் மீதான திருப்தி பரவலாக வேறுபடுகிறது.ஸ்வீடன் நாட்டில் 75% பேர் திருப்தி அடைந்திருப்பதாக கூறுகின்றனர் ஆனால் கிரீஸ் நாட்டில் 19 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி அடைவதாக கூறுகின்றனர்.தென்னாப்பிரிக்காவில் 63 சதவீதம் பேர் தங்கள் ஜனநாயகத்தில் அதிருப்தி அடைந்துள்ளனர், அதே நேரத்தில் 36 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளனர்.இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் மக்கள், தங்கள் ஜனநாயகம் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் ஒப்பீட்டளவில் மகிழ்ச்சியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 15:30

கொஞ்ச நாட்கள் தமிழகத்திற்கு சுற்றுலா வரச்சொல்லுங்கள். இங்குள்ள வாரிசு கொள்ளை அரசியலைப் பார்த்து ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளட்டும்.


sekar ng
ஜூலை 08, 2025 08:51

பணமும் குவாட்டாரும் தான் ஜனநாயகத்தை தீர்மாணிக்கிறது. நமது கல்வி ஜாதி அடிப்படையில் உருவாக்கிறது. அங்குதான் ஜாதி பதியப்படுகிறது அப்ளிகேஷனில்


m.arunachalam
ஜூலை 08, 2025 00:48

ஆய்வு செய்யாமலே இது நன்றாக , வெளிப்படையாக உணரலாம் . சதவீத கணக்கு என்னவென்று தெரிய ஆய்வு தேவைப்படலாம் . தெளிதல் நலம் .


தாமரை மலர்கிறது
ஜூலை 07, 2025 23:41

வளர்ந்த நாடுகளில் மக்கள் ஓட்டுபோட கூடவருவதில்லை. காரணம் அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. உலகின் ஜனநாயக தாய்மரமாக உள்ள ஒரே நாடு இந்தியா. அந்த நம்பிக்கையை கொடுக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள். விரைவில் வாக்குச்சாவடிக்கு கூட போகாமல் மொபைலில் ஓட்டுபோடும் வசதி வரவுள்ளது வரவேற்கத்தக்கது. மக்களின் கஷ்டத்தை புரிந்துள்ள ஒரே தேர்தல் ஆணையம் இந்தியாவினுடையது என்பது பெருமைக்குரியது.


Kulandai kannan
ஜூலை 07, 2025 23:18

அரசியல் கட்சிகளும், நீதிமன்றங்களும், மீடியாவும் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பார்க்கும்போது, ஜனநாயகத்தில் நம்பிக்கை குறைகிறது.


subramanian
ஜூலை 07, 2025 22:12

உண்மை. ஜனநாயகம் தமிழக திமுக ரவுடி ஆட்சியில் இல்லை.


சமீபத்திய செய்தி