உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குமரி, நெல்லை மக்களே உஷார்; வெளுத்து வாங்கப்போகும் கனமழை

குமரி, நெல்லை மக்களே உஷார்; வெளுத்து வாங்கப்போகும் கனமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வரும் 5ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும், இதனால், அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, தேனி, திருச்சி, கரூர் , புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நாகப்பட்டினம் , விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கிருஷணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

நவ., 3ம் தேதி

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Arachi
நவ 03, 2024 08:26

இயற்கையால் ஏற்படும் அழிவிற்கு குறிப்பாக கனமழைக்கு எந்த நாடும் தாக்குப்பிடிக்க முடியாது. எடுத்துக்காட்டு சமீபத்தில் ஸ்பெயினில் பெய்த கனமழை. இதில் அரசாங்கம் என்ன கடவுளா மழையை நிறுத்துவதற்கு. அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தாலும் இயற்கையிடம் தோற்றுப் போகும். நாகரீகம் தெரிந்த மனித இனம் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. குப்பைகளைக் போட்டு நிரவக்கூடாது. மனித இனம் இதை செய்யுமா?


Antony alexander
நவ 02, 2024 21:20

எங்க ஊர் நெல்லை –ல மழை


Ramesh Sargam
நவ 01, 2024 21:59

மக்கள்தான் உஷாராக, பத்திரமாக இருக்கவேண்டும். அரசை நம்பி ஏமாந்து போகாதீர்கள். யாராவது மரணித்தால், அப்படி எதுவும் ஆகக்கூடாது, ஒருவேளை மரணித்தால், அரசு நிவாரணம் கொடுக்கமட்டும் வரும். மற்றபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உங்களை காப்பாற்றமாட்டார்கள்.


N.Purushothaman
நவ 01, 2024 15:12

அடை மழை பெய்தாலும் டாஸ்மாக் திறந்து இருக்கும் ..அப்பறம் என்ன ? குடிமக்கள் குடிச்சிட்டு குதூகலத்துடன் இருக்கலாம் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை