உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் கைதான இந்தியர்கள் புகைப்படம் வெளியீடு

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் கைதான இந்தியர்கள் புகைப்படம் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள கனட போலீசார், அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சில் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இதில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு உள்ளதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த கரன் பிரார்(22), கமல்பரீத் சிங்(22), கரன்ப்ரீத் சிங்(28) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அல்பெர்டா என்ற பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி உள்ளதாக கூறியுள்ள போலீசார், அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். மேலும், இவர்களுக்கும், இந்திய அரசுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
மே 04, 2024 20:52

அம்புகளைப் பிடித்து விட்டார்கள் அடுத்ததாக எய்தவர்கள் மட்டுமே பாக்கி!


சிங்ஜி
மே 04, 2024 19:16

படிப்பதற்கான விசாவில் கனடா போனவங்க மழைக்குக்.கூட பள்ளி, காலேஜ் பக்கம் ஒதுங்கலியாம்.


Barakat Ali
மே 04, 2024 14:40

இவர்கள்தான் கொன்றார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் ??


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 04, 2024 13:47

ரொம்ப யோசிக்க வேண்டாம் நண்பர்களே கடைசியில் ஏதாவது பெண் விவகாரம், பணப் பிரச்சினை, நிலப் பிரச்சினை, ஏரியா பிரச்சினை இப்படி ஏதாவது ஒன்று வெளியேவரும் அதுவரை யூகத்தின் அடிப்படையில் அரசியல் செய்யலாம் அவ்வளவுதான் உலகம் முழுவதும் சீக்கியர்களின் நற்பெயருக்கு அவர்களாலேயே பங்கம் ஏற்படுகிறது


Anbuselvan
மே 04, 2024 12:53

இம்மாதிரியான செய்திகள் மறைமுகமாக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்


Ramesh Sargam
மே 04, 2024 12:16

கொலையானது ஒரு பயங்கரவாதி அவன் இன்றும் உயிருடன் இருந்திருந்தால் பல உயிர்களை பலிவாங்கி இருப்பான் அப்பாடா ஒழிந்தான் என்று இருக்கவேண்டும் ஆனால், கனடா அரசு யாரோ ஒரு சில இந்திய தேசதுரோக கட்சினர் வற்புறுத்தலுக்கு இணங்கி இந்த விஷயத்தை இப்படி பெரிதுபடுத்துகிறது கொலைசெய்யப்பட்டவன் ஒரு பயங்கரவாதியாக இருந்தாலும், அவனை கொலை செய்ய யாருக்கும் உரிமை இல்லை அவனை தண்டிக்க போலீஸ், நீதிமன்றம் இருக்கிறது ஆனால் ஒன்று, இந்த கொலை சத்தியமாக, நிச்சயமாக இந்தியாவின் தூண்டுதலில் நடந்திருக்காது கனடா அரசு உண்மையை அறியவேண்டும் விரல் இருக்கிறது என்று இந்தியாவின் மீது குற்றம் சாட்டக்கூடாது


ஆரூர் ரங்
மே 04, 2024 11:56

பின் லேடன் பயங்கரவாதி இல்லையா? அவன் அன்னிய மண்ணில் கொலை செய்யபட்ட நேரத்தில் கனடா என்ன கூறியது?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ