உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காது: சீனாவையும் வாங்க விடமாட்டேன் என்கிறார் டிரம்ப்

இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காது: சீனாவையும் வாங்க விடமாட்டேன் என்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''பிரதமர் மோடி விரைவில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளார். சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைப்பேன்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: பிரதமர் மோடியுடன் எனக்கு சிறந்த உறவு இருக்கிறது. அவர் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என எனக்கு உறுதி அளித்தார். இருப்பினும் இந்தியாவால் அதை உடனடியாக செய்ய முடியாது என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறினார். ஆனால் இந்த செயல்முறை விரைவில் முடிவடையும். இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைப்பேன். அதிபர் புடினிடமிருந்து நாங்கள் விரும்புவது இதை நிறுத்த வேண்டும். உக்ரைன் மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும். ரஷ்யர்கள் உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவோம். இந்தியா எண்ணெய் வாங்கவில்லை என்றால், அது மிகவும் எளிதாக்குகிறது. இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் மறைமுகமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அதிகரிக்கிறது. தொடர்ச்சியான வர்த்தகம் பல மக்களை இழந்த இந்த அபத்தமான போரை ரஷ்யா தொடர அனுமதிக்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது என மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. ஏற்கனவே, தேசிய நலனுக்காக நாங்கள் முடிவுகளை எடுக்கிறோம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Kumar Kumzi
அக் 16, 2025 13:01

டொனால்ட் டிரம்ப் காமெடி பண்ணுவதில் நம்பிள் துண்டுசீட்டையே மிஞ்சிவிட்டார்


Anbarasu K
அக் 16, 2025 12:47

பொதுவா ஒரு 80 வயது மேல வந்துட்டாவே... இவரை சொல்லி குத்தம் இல்ல இது அவனுங்க விதி


Anbarasu K
அக் 16, 2025 12:45

இவரை போயிட்டு அதிபரா தேர்ந்தெடுத்த அமெரிக்கா மக்களுக்கு பெரிய சோதனை காலம்


duruvasar
அக் 16, 2025 12:40

முதலில் உங்க ஊரு அரசு ஊழியர்க்குக்கு சம்பளம் கொடுக்குற வழிய பாருங்க.


Anand
அக் 16, 2025 12:25

நூலிழையில் தப்பியதால் வந்த வினை.


Vasan
அக் 16, 2025 12:14

USA should offer to supply oil to India, at a better price, than the price at which Russia supplies oil to India. If that happens, India will switch to USA for oil supplies and will stop purchasing from Russia. That will reduce revenue for Russia, and if other countries also join, will totally cut off revenue to Russia. Russia will get agitated by this action, will start attacking Ukraine more severely than now, but Russia can not withstand for long. Russia will yield and succumb to pressure. War will come to an end. Trump will be awarded Noble prize for his peace keeping efforts.


vidhu
அக் 16, 2025 10:59

உளறலில் உச்சம் பப்புவின் காத்து அடிக்குது


Appan
அக் 16, 2025 10:56

What Trump doing is a good deed, keeping peace in the world. But the means adopted, threatening countries are not good. Trump should try to build consensus on the war instead he threatens everybody. Now people had forgotten the noble cause and started hating Trump.


M. PALANIAPPAN, KERALA
அக் 16, 2025 10:45

யாரிடம் இருந்து என்ன என்ன வாங்கவேண்டும் என்பதை தீர்மானிக்க அமெரிக்காவிற்கு என்ன அதிகாரம் உள்ளது. டிரம்ப் தினசரி முன்னுக்கு பின் முரணாக பேசி உலகின் நம்பர் ஒன் கோமாளி என்பதை நிரூபித்து வருகிறார்


Nathansamwi
அக் 16, 2025 10:34

இந்த ஆளுக்கு யாராவது முட்டாள்களுக்கான நோபல் பரிசு கொடுங்கப்பா .... இம்சை தாங்கமுடில


சமீபத்திய செய்தி