உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காரில் நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தை: புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி என்கிறார் மோடி

காரில் நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தை: புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி என்கிறார் மோடி

பீஜிங்: சீனாவில் காரில் இருந்த படியே ரஷ்ய அதிபர் புடின் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ''ரஷ்ய அதிபர் புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி'' என சமூக வலைதளத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று துவங்கியது. இது இன்று நிறைவு பெறுகிறது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m71ptlik&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், இன்று (செப் 01) ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு, இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீதம் அபராத வரி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர்.

ஒரே காரில் பயணம்

இந்தியா-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைக்காக, சீனாவின் தியான்ஜினில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் ஒரே காரில் பயணம் மேற்கொண்டனர். தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து மாநாடு அரங்கிற்கு ஒரே காரில் வந்தனர்.

ஒரு மணி நேர பேச்சு

மாநாட்டு அரங்கத்திற்கு கார் வந்த பிறகும், காரில் இருந்தபடியே இருவரும் 50 நிமிடங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ''இரு தலைவர்கள் காரில் இருந்த படியே ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்'' என குறிப்பிட்டார்.

மகிழ்ச்சி

புடினை சந்தித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ''ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது'' என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

திகழ்ஓவியன்
செப் 01, 2025 13:22

செம காமெடி


karupanasamy
செப் 01, 2025 15:05

மிளகாயை அரைத்து அப்பியதைப்போல் இருக்கிறதா?


பேசும் தமிழன்
செப் 01, 2025 11:24

எங்கள் நாட்டின் தேவைக்கு கச்சா எண்ணெய் வாங்குகிறோம்.... எங்களை வாங்க கூடாது என்று சொல்ல நீங்கள் யார்....அதை விட குறைந்த விலையில் தந்தால்.. எவ்வளவு கச்சா எண்ணையையும் வாங்கி கொள்கிறோம்.. எங்களது நாட்டின் மக்கள் தொகை அதிகளவில் உள்ளது... அவர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.


V RAMASWAMY
செப் 01, 2025 11:17

அடுத்து நம் முதல்வர் தமிழகத்துக்கு ரஷ்யாவிலிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கு புடினை சந்திக்கச்செல்வாரா?


KRISHNAN R
செப் 01, 2025 10:53

அதெல்லாம் சரி.. உக்ரைன் போர் முடிங் க...


jaya
செப் 01, 2025 10:09

நம்ம என்ன எழுதினாலும் நமக்கு 200 ரூபா தானே கிடைக்குது


Tamilan
செப் 01, 2025 09:32

அம்பானிக்கு அதானிக்கும் ரஸ்யாவிலிருந்து கொட்டுகிறது


Arunkumar,Ramnad
செப் 01, 2025 11:08

உன்னைப் போன்ற துரோகிகளுக்கு இந்தியாவில் இடமில்லை


ராஜ்
செப் 01, 2025 11:23

அமைதி மார்க்கம் ஏன் கதருகிறது


vivek
செப் 01, 2025 11:24

ஆக்சுபோர்டு அறிவாளி நம்ம tamilan


Kumar Kumzi
செப் 01, 2025 12:10

எல்லாருமே பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா தான் இருப்பானுங்க


Palanisamy T
செப் 01, 2025 09:12

உங்களுக்கு மட்டுமா, எங்களுக்கும் மகிழ்ச்சி. என்றும் அவர் அமைதியை விரும்புபவர், அமைதி வழியை மட்டும் நம்புபவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை