உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா வெற்றி தின கொண்டாட்டம்: பிரதமர் மோடி பங்கேற்கவில்லை

ரஷ்யா வெற்றி தின கொண்டாட்டம்: பிரதமர் மோடி பங்கேற்கவில்லை

மாஸ்கோ: ரஷ்யாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என அந்நாடு உறுதி செய்துள்ளது.இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை வீழ்த்தி வெற்றி பெற்றதை ரஷ்யா ஒவ்வொரு ஆண்டும் மே 9 ம் தேதி மாஸ்கோவில் கொண்டாடி வருகிறது. அன்றைய தினம் பிரம்மாண்ட அணிவகுப்பு மற்றும் ரஷ்யாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் நிகழ்ச்சிகள் நடக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hxgu04wr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தாண்டு 80வது ஆண்டு வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்கும்படி சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்து இருந்தார். இதில் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.இந்நிலையில், மே 9 ம் தேதி நடக்கும் இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என ரஷ்யா அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதி செய்து உள்ளார்.இந்நிலையில், இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுதிஷ்
மே 01, 2025 07:10

இது போருக்கான நேரமில்லை. டயலாக் வருமா? தனக்கு வந்தா தக்காளி சட்னி ஆகுமா?


ஷாலினி
ஏப் 30, 2025 22:20

இந்த முக்கியமான நேரத்தில் பிரதமர் நாட்டில் இருப்பது அவசியம்


புதிய வீடியோ