உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரிசார்ட்டில் விஷ வாயு கசிவு: ஜார்ஜியாவில் இந்தியர்கள் 11 பேர் பலி!

ரிசார்ட்டில் விஷ வாயு கசிவு: ஜார்ஜியாவில் இந்தியர்கள் 11 பேர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திபிலிசி: ஜார்ஜியா நாட்டு ரிசார்ட்டில் கார்பன் மோனாக்சைடு வாயு கசிவால் இந்தியர்கள் 11 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பிய நாடான ஜார்ஜியா, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்றாகும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக, இந்தியர்கள் ஏராளமான பேர் இந்நாட்டுக்கு செல்கின்றனர். இங்குள்ள குதாவ்ரி பகுதியில் மலையின் மீது ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட்டில் திடீரென கார்பன் மோனாக்சைடு விஷ வாயு பரவியது. இதனால் அங்கிருந்த 12 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலியானவர்கள் அனைவரும் ரிசார்ட்டில் பணிபுரிந்தவர்கள் என்றும், 12 பேரில் 11 பேர் இந்தியர்கள் எனவும் தெரியவந்துள்ளது. ரிசார்ட்டின் இரண்டாவது மாடியில் ஓய்வெடுக்கும் பகுதியில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பணியாளர்கள் பலியான சம்பவம் குறித்து திபிலிசியில் உள்ள இந்திய துாதரகத்திற்கு தகவல் சொல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து நேரில் சென்று பார்த்து விசாரித்த இந்திய துாதரக அதிகாரிகள் கூறியதாவது:பலியான இந்தியர்களுக்கு எதிராக, வன்முறை ஏதுவும் நிகழ்த்தப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளோம். கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கி, இந்தியர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இறந்தவர்களின் உடலைத் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்கிறோம்.இந்தியாவில் இருக்கும் பலியானவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.கவன குறைவால் இந்த சம்பவம் இருந்திருக்கலாம். ஜார்ஜியாவின் குற்றவியல் சட்டத்தின் 116 வது பிரிவின் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.இவ்வாறு இந்திய துாதரக அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Padmasridharan
டிச 17, 2024 11:33

அங்கே Resortல இந்தியர்கள் மட்டும் இறக்கிறார்கள். இங்கு Hospitalல்ல? நோயாளிகள் மட்டும் இறக்கிறார்கள். Safe employees providing poor accommodation


Subramanian
டிச 17, 2024 09:04

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


அப்பாவி
டிச 17, 2024 06:11

அடடே... இங்கேயே ரெண்டு கோடி வேலை இருக்கே... இறந்தவர்களின் குடுமங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


S. Neelakanta Pillai
டிச 17, 2024 05:49

ஆழ்ந்த இரங்கல்கள். கவனக்குறைவு.....ஐரோப்பிய நாடுகளில் ஆபத்துகளை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் அனைத்து தொழில்நுட்பம் இருந்தும், கடுமையான சட்டங்கள் இருந்தும் 11 இந்தியர்கள் பலி. பாதுகாப்பு சிஸ்டத்தை அலட்சியப்படுத்தினார்களா தெரியவில்லை. தீவிர புகன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும்.


புதிய வீடியோ