உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போலந்தில் ஒத்திகையின் போது துயரம்: எப்-16 போர் விமானம் விபத்தில் சிக்கி விமானி பலி!

போலந்தில் ஒத்திகையின் போது துயரம்: எப்-16 போர் விமானம் விபத்தில் சிக்கி விமானி பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வார்சா: போலந்தில் விமானக் கண்காட்சி ஒத்திகையின் போது எப்-16 போர் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் விமானி உயிரிழந்தார்.போலந்து ராணுவத்தில் அதிநவீன எப்-16 ரக போர் விமானங்களில் பயன்பாட்டில் உள்ளன. அந்நாட்டின் ரடோம் நகரில் விமான வான்சாகச நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. இந்ந நிகழ்ச்சியில் போர் விமானங்கள, சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என பல பங்கேற்றன. இதற்கான ஒத்திகை பயிற்சி நடந்தது. அப்போது, திடீரென எப்-16 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து ஓடுபாதையை சேதப்படுத்தியதால், ஆகஸ்ட் 30-31ம் தேதிகளில் நடக்க இருந்த விமான கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட போலந்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் வாடிசா கோசினியாக விமானிக்கு அஞ்சலி செலுத்தினார்.விமானம் கீழே விழுந்து நொறுங்கிய பிறகு தீப்பற்றிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. எப் 16 விமானம் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Naga Subramanian
ஆக 29, 2025 13:14

எங்களுடைய போர் விமானமான F16 -யை போலந்து நாடு பாழ்படுத்தியமையால், போலந்துக்கு 200 % வரி உடனடியாக விதிக்கப்படுகிறது


sankaranarayanan
ஆக 29, 2025 12:56

இனி இந்தியாவிலிருந்து போர் விமானங்களை உலக நாடுகள் வாங்கலாம் நம்பகத்தன்மை கொண்டவைகள் திறமை வாய்ந்தவைகள்


SP
ஆக 29, 2025 12:14

அமெரிக்காவிற்கு இனி இறங்கு முகம் தான் அதன் அறிகுறிதான் இதெல்லாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை