வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இது போல அந்நிய தேசத்து பாஸ்போர்ட் வைத்துள்ள தேசத்திற்கு அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறி வரும் அந்நிய தேசத்து கைக்கூலிகள் பாரதத்தை விட்டு ஓடும் காலமும் ஒரு நாள் வரும்.
இலங்கையை நார அடித்த கும்பல் ஒடி ஒளியுது
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஜேவிபி தலைவர் அனுரா திசநாயகே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இடையே இழுபறி ஏற்பட்டது. இரண்டாம் விருப்ப ஓட்டுகள் எண்ணப்பட்டதன் முடிவில், அனுரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்னரே அந்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் அங்கிருந்து கிளம்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.முன்னாள் அமைச்சர் சுசாந்தா புன்சினிலமே நேற்று மதியம் அந்நாட்டு நேரப்படி 2:25 மணிக்கு சென்னை கிளம்பினார்.ஒருங்கிணைந்த தேசிய கட்சி பொதுச்செயலர் பலிதா பங்காரா நேற்று இரவு 11:25 மணியளவில் தாய்லாந்துக்கு சென்றார்.முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவின் மாமனார் மற்றும் சில உறவினர்களும் இலங்கையில் இருந்து கிளம்பி வெளிநாட்டிற்கு பறந்தனர்.சில புத்தமத துறவிகளும் வெளிநாட்டிற்கு கிளம்பியதாக கூறப்படுகிறது. அனைவரும் கொழும்புவில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பினர்.
இது போல அந்நிய தேசத்து பாஸ்போர்ட் வைத்துள்ள தேசத்திற்கு அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறி வரும் அந்நிய தேசத்து கைக்கூலிகள் பாரதத்தை விட்டு ஓடும் காலமும் ஒரு நாள் வரும்.
இலங்கையை நார அடித்த கும்பல் ஒடி ஒளியுது