உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்

போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம்: போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் தெரிவித்தது.வாடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், 88, வயது முதுமை காரணமாக உடல் நலம் குன்றியுள்ளார். 2022ல் முழங்கால் வலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர். 2023ல் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்.இந்நிலையில், சில நாட்களாக மூச்சு திணறல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 14ம் தேதியன்று ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து, வாடிகன் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர் குணமடைய கத்தோலிக்கர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Venkataraman
பிப் 23, 2025 14:03

போப் ஆண்டவர் எல்லா மக்களின் குறைகளை தீர்ப்பவர், நோய்களை போக்குபவர், மரணத்திலிருந்து மீட்பவர் என்றெல்லாம் சொல்லுகிறார்களே அல்லூலேயா என்று கூச்சல் போடுபவர்கள், இப்போது ஏன் அவரை காப்பாற்ற முடியவில்லை? ஆனால் அவர் இறந்து விட்டால் அவருக்கு .செயின்ட் என்று பட்டம் கொடுத்து விடுவார்கள்


Rajan A
பிப் 23, 2025 22:27

எல்லோரும் மனிதர்கள் தான். நல்ல நிலை அடைய பிரார்த்தனை


எவர்கிங்
பிப் 23, 2025 12:45

லாரன்ஸ் இருக்கவே இருக்காரே


Durai Kuppusami
பிப் 23, 2025 12:34

நலமொடு மீண்டெழ ஆண்டவரை வேண்டுகிறேன்.. ஏம்பா தமிழ்நாட்டில் அவங்க ஆளுங்க எத்தனை பேர் இருக்கிறார்கள்.. பிறப்பால் பார்வை இழந்த ஒரு குழந்தையை தலையில் கை வைத்து பார்க்கும் சக்தி பெற்ற மாதிரி அவர்களில் யாரையாவது வாடிகன் அனுப்பினாலென்ன....


கிஜன்
பிப் 23, 2025 12:34

எளியமக்கள் இவருக்காக வருந்தி பிரார்த்தனை செய்வார்கள் .... இவரை சுற்றி இருப்பவர்கள் ....


Ramesh Sargam
பிப் 23, 2025 12:27

என்ன இருந்தாலும் அவர் ஒரு மதத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளவர். அந்த மத்ததில் உள்ள சிலர் தவறுகள் செய்யலாம். அதற்கு இவர் பொறுப்பு அல்ல. மீண்டும் போப் அவர்கள் முற்றிலும் உடல் நலம் பெற அந்த இயேசுவை பிரார்த்திக்கிறேன்.


R.Subramanian
பிப் 23, 2025 19:05

அந்த மதத்தில் உள்ளவர்களுக்கு பயிற்சி எப்படி பேச வேண்டும் செயல்பட என்பதை எல்லாம் வாடிகன் தான் முடிவு செய்கிறது


Durai Kuppusami
பிப் 23, 2025 12:25

ஏம்பா தமிழ் நாட்டில் இருந்து அவங்க ஆளுங்க எத்தனை பேர் இருக்கிறார்கள்


Barakat Ali
பிப் 23, 2025 12:04

இவரையும் காப்பாற்ற வேண்டும் ....


Nesan
பிப் 23, 2025 11:42

காப்பாற்றுவார்


Ramakrishnan G
பிப் 23, 2025 10:54

Wishing him a speedy recovery. May God bless him


sridhar
பிப் 23, 2025 10:53

இறப்பு தவிர்க்க முடியாதது. எல்லா உயிரினங்களுக்கும் இது பொருந்தும்.


Rajan A
பிப் 23, 2025 22:28

சரியான கருத்து. இருக்கும் போது என்ன செய்தார் என்பது முக்கியம்


சமீபத்திய செய்தி