உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்

போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம்: கடந்த 24 மணி நேரத்தில் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக கருதப்படுபவர் போப் ஆண்டவர் என அழைக்கப்படும் போப் பிரான்சிஸ், 88; ஐரோப்பிய நாடான இத்தாலியின் தலைநகர் ரோம், வாடிகன் நகரில் வசித்து வருகிறார். அவருக்கு, மூச்சுக்குழாயில் அழற்சி, சிறுநீரகப் பிரச்னை இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நிமோனியா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் கூறியிருந்தது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுநீரக பிரச்னை சரியாகி வருகிறது. தற்போது நுரையீரல் வீக்கம் சரியாக வருகிறது. இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனைகள் மூலம் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குணமடைந்து வருவதால் போப் மருத்துவமனை அறையில் வழக்கமான பணிகளை மேற்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Solomon, Chennai
மார் 01, 2025 14:24

whatsappல் ஒருவர் Feb 25ம் அன்றே pope இறந்துவிட்டார், ஆனால் வாட்டிகன் அதை உலகுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதற்கு காரணம் மார்ச் 5காக (Ash Wednesday) waiting ஆம். துயரச்செய்தி.


Keshavan.J
மார் 01, 2025 11:08

The sudden and opportunist Christian Udavanithi should conduct special prayer for pope.


சிந்தனை
மார் 01, 2025 10:04

போப் பதவி ஏற்றதிலிருந்து இதுவரை மருந்தே சாப்பிட்டதில்லை. உணவும் சாப்பிடுவதில்லை. கர்த்தர்தான் வாழ வைக்கிறார். இப்படிக்கு பொய் வாயன்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 01, 2025 09:29

இறவா வரம் பெற்றவர்கள் யாருமில்லை எனினும் மீண்டு வரட்டும் .... தேறிவருவதன் காரணம் பிரார்த்தனையா ?? மருத்துவமா ??


எவர்கிங்
மார் 01, 2025 08:59

தமிழக பிரார்த்தனைக்கு வெற்றி


raman
மார் 01, 2025 08:35

மதப் பிரச்சாரம் செய்து வருபவர்கள்,ஏசு இறந்தவர்களை பிறப்பிப்பார், அவர்கள் தட்டினால் எல்லா வியாதியும் குணமாகும் என்பார்கள். போப் பிழைத்து வந்து விடுவார்.


முக்கிய வீடியோ