உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்காக போப் பிரார்த்தனை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்காக போப் பிரார்த்தனை

வாடிகன்: நிலநடுக்கத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும், மியான்மர், தாய்லாந்து மக்களுக்காக போப் பிரார்த்தனை செய்ததாக, வாடிகன் அறிவித்துள்ளது.நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஐந்து வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போப் பிரான்சிஸ், தற்போது விரைவாக குணமடைந்து வருகிறார்.88 வயதான கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் உலக நடப்பு செய்திகளை கவனித்து வருகிறார். மியான்மர் மற்றும் தாய்லாந்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது பிரார்த்தனையை செய்ததாக வாடிகன் அறிவித்துள்ளது. மியான்மர், தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சிக்கி 150 பேர் பலியாகி உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

PARTHASARATHI J S
மார் 29, 2025 07:58

நானும் ஆன்மிகவாதிதான். என்றாலும் ஒன்றை புரிந்து கொள்ள முடியவில்லை. பிரார்தனை செய்வதால் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் வரும் அவஸ்தைகள் தீருமா ? அங்கே இன்றைய தேவை மருத்துவ வசதி, இடவசதி. இதனை எல்லா அரசுகளும் மனமுவந்து உதவ வேண்டும் போப் உட்பட.


Appa V
மார் 29, 2025 00:59

பத்து நாள் முன்னாடி இவருக்கு உலக மக்கள் பிரார்த்தனை இன்று மியான்மர் தாய்லாந்து மக்களுக்கு போப் பிரார்த்தனை


முக்கிய வீடியோ