ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
டோக்கியோ:ஜப்பானின் கியூஷுவில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.தென்மேற்கு ஜப்பானின் கியூஷு பகுதியில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (இ.எம்.எஸ்.சி)தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vbsob466&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலநடுக்கம் 37 கி.மீ., (23 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக இ.எம்.எஸ்.சி தெரிவித்துள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஜப்பான் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அவற்றில் கட்டிடங்கள் குலுங்கும் காட்சியைக் காணமுடிகிறது.ஜப்பானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன, இது தென்மேற்கு தீவுகளான கியூஷு மற்றும் ஷிகோகுவை உலுக்கியது. அதிகாரிகள் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்தனர், ஆனால் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.