வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கராகஸ்:தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கி.மீ., தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. 7.8 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் உணரப்பட்டது. சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து ஜூலியா மாகாணத்தில் 3.9 ரிக்டர் மற்றும் பரினாஸ் மாகாணத்தில் 5.4 ரிக்டர் அளவில் நில அதிர்வுகள் உணரப்பட் டுள்ளன.