உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம்: ஸ்லோவாக்கியா பல்கலை கவுரவிப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம்: ஸ்லோவாக்கியா பல்கலை கவுரவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிராட்டிஸ்லாவா: ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி, ஸ்லோவாக்கியா பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது. அரசு முறை பயணமாக போர்ச்சுக்கல் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அடுத்ததாக ஸ்லோவாக்கியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அதிபர் பீட்டர் பெல்லேக்ரினியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து பேசினார்.அப்போது, இந்திய தத்துவ இலக்கியங்களின் ஸ்லோவாக்கியா மொழிபெயர்ப்பு அடங்கிய புத்தகங்களை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அவர் ஸ்லோவாக்கியா கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழக வளாகத்தை பார்வையிட்டார். பொது சேவையில் ஜனாதிபதியின் சிறந்த பணிகளைப் பாராட்டி அந்த பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ஸ்லோவாக்கியாவில் இந்திய சமூகத்தினரை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவிற்கும் ஸ்லோவாக்கியாவிற்கும் இடையே உறவுகள் வளர்ந்து வருகிறது.யோகா, ஆயுர்வேதம் மற்றும் இந்திய உணவு வகைகள் போன்றவற்றால் இந்திய பாரம்பரியம் பிரபலப்படுத்தப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துகிறது. இது சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிப்பதை உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் ஸ்லோவாக்கியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Oviya Vijay
ஏப் 11, 2025 15:36

பொம்மைப் பதவியில் நன்றாக தலையாட்டுகிறார் என்பதற்காக கொடுக்கப்பட்டதாக இருக்கலாம்... சமீப காலத்தில் அந்த உயரிய பதவிக்கு அழகு சேர்த்தவர் என்றால் அது ஐயா அப்துல் கலாம் அவர்கள் மட்டுமே... மற்றவர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் படியாக அமையவில்லை... இவரையும் சேர்த்து...


Barakat Ali
ஏப் 11, 2025 12:33

Blood is thicker than water.


PSGTECHHOSTEL
ஏப் 11, 2025 09:48

இதை வைத்து என்ன பயன் மக்களுக்கு / அவருக்கு


Thetamilan
ஏப் 11, 2025 09:33

ஒரு அங்கீகாரம்


பிரேம்ஜி
ஏப் 11, 2025 09:23

வெறும் பெருமை! மக்களுக்கு ஒரு பிரயோசனம் இல்லை! வாழ்க பாரத மாதா!


முக்கிய வீடியோ