உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விரைவில் இந்தியா வருகிறார் அதிபர் புடின்: ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

விரைவில் இந்தியா வருகிறார் அதிபர் புடின்: ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவித்தார்.கடந்த ஆண்டு பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தபோது இந்தியாவுக்கு வருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை அதிபர் புடின் ஏற்றுக்கொண்டார். அதன்படி அவரது இந்திய சுற்றுப்பயணம் குறித்து ரஷ்யா இன்று அறிவித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=trx4w6fj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது: புடினின் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்தார். இப்போது எங்கள் தரப்பில் பயணம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இருப்பினும் அவர் அதிபர் புடின் இந்தியாவுக்கும் வரும் தேதியை குறிப்பிடவில்லை. இது போரின் சகாப்தம் அல்ல என்று பிரதமர் மோடி பலமுறை புடினிடம் கூறியிருந்தாலும், உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
மார் 27, 2025 18:10

ஜாக்கிரதை அய்யா அமெரிக்க அஜனாதிபதி டிரம்ப்புக்கு கோபம் வரும். அடுத்தது நேரில் இந்தியா வந்துவிடுவார்கள் இல்லையேல் வரிச்சுமையை அதிகமாக்கிவிடுவார்...


என்றும் இந்தியன்
மார் 27, 2025 17:43

ரஷிய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தர சம்மதம்: செர்கே லாவ்ரவ்????


Petchi Muthu
மார் 27, 2025 16:44

ரஷ்ய அதிபர் புடின் வருகை வரவேற்கிறேன்


Petchi Muthu
மார் 27, 2025 16:38

முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.. காரியத்துடன் தான் ரஷ்யா இந்தியாவிற்கு பயணம் வருகிறது


சமீபத்திய செய்தி