உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் அதிபர் டிரம்ப் அறிவிப்பு

பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாட்டின் பெரும் எண்ணெய் வளத்தை மேம்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் கடலோர பகுதிகளில் எண்ணெய் சேர்மானம் இருப்பதாக நீண்ட காலமாக அந்நாடு கூறிவரும் நிலையில், அதை பயன்படுத்த நடவடிக்கை எடுக்காத அந்நாடு, கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2v02psid&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது இந்த வளங்களை அமெரிக்கா பயன்படுத்தப் போகிறதா என்ற கேள்வியை, டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு கிளப்புகிறது. எனினும், இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்கு, பாகிஸ்தான் பிரதமர் ெஷபாஸ் ெஷரீப் வரவேற்பு தெரிவித்துள்ளார். 6 நிறுவனத்துக்கு தடை இதற்கிடையே, தடை விதிக்கப்பட்ட ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வணிகம் மேற்கொண்டதாகக் கூறி, இந்தியாவின் ஆறு நிறுவனங்கள் மீது டிரம்ப் அரசு பொருளாதார தடை விதித்துள்ளது. கான்சன் பாலிமர்ஸ், ஏ.ஐ.,கெமிக்கல் சொலுஷன்ஸ், ராம்நிக்லால் கோசலியா அண்டு கம்பெனி, ஜுபிடர் டை கெமிக்கல், குளோபல் இண்டஸ்டிரியல் கெமிக்கல்ஸ், பெர்சிஸ்டன்ட் பெட்ரோசெம் ஆகியவை அவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

ராமகிருஷ்ணன்
ஆக 01, 2025 14:09

உங்க அணுஆயுத கிடங்குகளை காவல் காக்க வாடகை, சம்பளம் தரணும் இல்லை. பாக்கிஸ்தான் பிச்சைகார பயல்களால் நிச்சயம் அமெரிக்காவுக்கு லாபம் இல்லை. நஷ்டம் ஏற்படும்.


Ramesh Sargam
ஆக 01, 2025 12:13

பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் அதிபர் டிரம்ப் அறிவிப்பு. சாக்கடையில் இறங்கினால் நாம் என்ன செய்யமுடியும்?


Anand
ஆக 01, 2025 10:51

ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக கிராண மலை அணு ஆயுத மையத்தை இந்தியா தாக்கியதில் இருந்தே இவர் மிகவும் பைத்தியம் பிடித்து அலைகிறார்.. அங்கே அடித்தால் இவருக்கு ஏன் வலிக்கிறது?


Balasubramanyan
ஆக 01, 2025 10:29

I have visited States many times. The ordinary American people are denied to taste different mango,banana,sapota and other fruits from our country. The two varies of mango here are fibrous and saggy. They know only the cavendish banana. Will he allow free trade of our fruits to his country.we don't need foreign liquor. Already TASMAC is here. What dairy products he wants to trade with India.


கா. ரவிச்சந்திரன், புதுக்கோட்டை
ஆக 01, 2025 09:50

இந்த நாகரீக கோமாளியின் வாய்ச் சவடாலை ஒழிக்க முக்கிய வழி பிரிக்ஸ் நாடுகள் இணைந்து சர்வதேச நாணயத்தை ஏற்படுத்தி வர்த்தகம் செய்வதுதான். அதுவரை இந்தக் கோமாளி தனது சர்க்கஸ் வேலையை செய்து கொண்டுதான் இருப்பார்.


Appan
ஆக 01, 2025 08:49

பாகிஸ்தான் எதை ஏற்றுமதி செய்யும்..?. அவர்களிடம் இருப்பது தீவிரவாதம் தான்.. அதை தான் போன 9/11 அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து பாம்ப வெடித்தார்கள்.. அமெரிக்காவுக்கு வாழ்த்துக்கள்


Rajarajan
ஆக 01, 2025 08:45

பெரியண்ணனுக்கு ஒரு பாக்கெட் விபூதியும், ஒரு கொத்து வேப்பிலையும் அனுப்பி வெக்கணும். வேப்பிலை அடிச்சி, திருநீர் பூசினா தான் தெளியும் போல.


ஆரூர் ரங்
ஆக 01, 2025 08:10

98 சதவீதம் iPhoneகள் இந்தியாவில்தான் தயாராகி அமெரிக்காவுக்கு செல்கின்றன. இவற்றுக்கு வரி கட்டப் போவது அமெரிக்க மக்கள்தான். வேறு பிராண்ட்டுக்கு மாறவும் மாட்டார்கள். அது போல் இந்திய மருந்துகளை தவிர்த்தால் அதற்கு பதில் நம்மைவிட பத்து இருபது மடங்கு அதிக விலைக்கு மேலை நாடுகளிலிருந்து வாங்க வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக 25 சதவீத வரி கட்டி மலிவான இந்திய மருந்துகளையே வாங்கி விடுவார்கள். ஆக இந்த வரியால் நமக்கு பாதிப்பில்லை. அமெரிக்க பொதுமக்களுக்கே பாதிப்பு. டிரம்புக்கு வாக்களித்தற்கு பெருந்தண்டனை.


ஆரூர் ரங்
ஆக 01, 2025 08:03

யு எஸ் சே ரஷ்ய எண்ணெய், யுரேனியம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. அது வேற வாயி.


Senthoora
ஆக 01, 2025 07:23

என்னதான் சொன்னாலும், அமெரிக்காவுக்கு யார் ஜனாதிபதியாக வந்தாலும், அமெரிக்கா இஸ்ரேல், பாகிஸ்தானுடன் நகமும் சதையும்போல இருக்கு, அமெரிக்கா ஆயுத விற்பனை இல்லாவிட்டால் பொருளாதாரம் அவுட், அப்ப, அப்ப அரசியல், காலம், பொருளாதாரம் தடுமாறும்போது, அமெரிக்கா இஸ்ரேல் அல்லது பாகிஸ்தானை தூண்டி எதாவது ஒரு நாட்டுடன் தாக்குதல் நடத்த சொல்லி கட்டளை இடும், காலகாலமா இதுதான் நடக்குது.


Jack
ஆக 01, 2025 09:03

நகமும் சதையும்போல .... ஈயும் வெள்ளமும் போல ..என்று அடுக்கிக்கொண்டே போகலாம் . அமெரிக்க அரசாங்கம் நேரடியாக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது .. டிரம்புக்கு கப்பம் கட்ட தயாராக இருக்கும் தனியார் நிறுவனம் தான் ஒப்பந்தம் செய்து வேறு நிறுவனத்துக்கு கமிஷன் முறையில் கை மாற்றிவிடும் ... பிறகு ஆர்பிட்ரேஷன் கோர்ட் என்று வம்பிழுத்து வேலை பாக்காமலேயே மில்லியன் பில்லியன் சமம்பாதிக்க வழி தேடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை