உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அணு ஆயுத திட்டத்தை ஈரான் மீண்டும் துவக்கினால் தாக்குவோம்: அதிபர் டிரம்ப்

அணு ஆயுத திட்டத்தை ஈரான் மீண்டும் துவக்கினால் தாக்குவோம்: அதிபர் டிரம்ப்

த ஹேக் : 'அணு ஆயுத திட்டத்தை மீண்டும் துவக்கினால் ஈரானை தாக்குவோம். அந்த தாக்குதல் தற்போது நடந்ததைவிட மோசமானதாக இருக்கும்,' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறினார்.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்க விமானப்படைகள் குண்டு வீசி அழித்தன. அதன்பின், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் த ஹேக்கில் நடக்கும், 'நேட்டோ' எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் மாநாட்டில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ஈரானின் அணுசக்தி நிலையங்கள் எல்லாம் முழுதுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு அங்கிருந்து எதையும் எடுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தளவுக்கு அமெரிக்க படைகள் வேகமாக செயல்பட்டன.ஈரானின் அணு ஆயுதத் திட்டம் முடிந்துவிட்டது. அவர்கள் அதை மீண்டும் உருவாக்க முயற்சித்தால், நாங்கள் மீண்டும் தாக்குவோம், அது இன்னும் மோசமாக இருக்கும். வெறுமனே போர் நிறுத்தம் வேண்டாம்; உண்மையான முடிவு வேண்டும். அதற்கு ஈரான் அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும். அடுத்த சில நாட்களில் இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அமெரிக்க ராணுவ உளவு அமைப்பு நடத்திய முதற்கட்ட ஆய்வில், 'அமெரிக்காவின் தாக்குதல் குறைந்தபட்ச சேதத்தையே ஈரானின் அணு ஆயுதத் திட்டத்திற்கு ஏற்படுத்தியது. அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தாக்குதலுக்கு முன் ஈரான் இடமாற்றியிருக்கலாம்' என, தெரியவந்துள்ளது.

திட்டியது ஏன்?

இஸ்ரேலும் ஈரானும் பள்ளி வளாகத்தில் கட்டிப்புரண்டு அடித்துக்கொள்ளும் குழந்தைகள் போல சண்டையிட்டனர். அதனால் அவர்களை வழிக்குக் கொண்டுவர கடுமையாகப் பேச வேண்டியிருந்தது. அவ்வப்போது அப்படி பேச வேண்டும்.-டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

nisar ahmad
ஜூன் 26, 2025 21:17

டிரம் உண்மையான ஆண் மகனா இருந்தா தற்போது அனு ஆயுதங்கள் உள்ள நாடுகளை தன் நாடு உள்பட அனு ஆயுதங்களை அழிக்கச்சொல்லட்டும். பிறகு ஈரானை எச்சரிக்கட்டும்.இந்த போரையே இஸ்ரேல் அழிந்துவிடூம் என்பதால் தான் ஈரானிடம் கெஞ்சி போர்நிறுத்தத்தை கொண்டுவந்தது.


V RAMASWAMY
ஜூன் 26, 2025 13:21

பாகிஸ்தான் ரகசியமாக சீன உதவியுடன் பயங்கர சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன. என்ன செய்யப்போகிறீர்கள் அமெரிக்க அதிபர் அவர்களே.


Shekar
ஜூன் 26, 2025 08:15

என்னைக்காவாவது, எவனாவது அமெரிக்கா மீது அணு குண்டு போடப்போறான். அப்புறம்தான் இந்த நாட்டாமை வேலையை இவனுக விடுவானுக.


GMM
ஜூன் 26, 2025 08:05

ஈரான், பாகிஸ்தான் அணு ஆயுத ரகசிய திட்டம் சீனா, வட கொரியா, போன்ற நாடுகளால் ஊக்குவிக்கப்படும். உலகில் முதல் பாதிப்பு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மதத்தை கேடயமாக வைத்து பிற இன மக்களை அழித்த வரலாற்றை அறிய முடியும். படையெடுப்பில் மன்னருக்கு முன் மக்கள் தான் இலக்கு. அணு, ஏவுகணை பாகிஸ்தான் , ஈரானுக்கு தேவையில்லை. இங்கு நிர்வாகம், ராணுவம், தீவிர வாதிகள் தனித்தனியே சுயாட்சியை அமுல்படுத்துவர்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 26, 2025 07:46

ஈரானைத் தவிர [அமெரிக்கா உட்பட] வேறு எந்த நாட்டிடமும் அணுவாயுதம் இல்லையா ??


SUBBU,MADURAI
ஜூன் 26, 2025 07:05

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆனது என்பது போல ஹீரோவாக நினைக்கப் போய் கோமாளி ஆனதுதான் மிச்சம்!


K V Ramadoss
ஜூன் 26, 2025 07:00

ஈரானுக்கு பாடம் சொல்லும் டிரம்ப் ஏன் பாகிஸ்தானுக்கு பாடம் சொல்லுவதில்லை ?


முக்கிய வீடியோ