உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலங்கையில் செப்.,17 - அக்.,16ல் அதிபர் தேர்தல்

இலங்கையில் செப்.,17 - அக்.,16ல் அதிபர் தேர்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: இலங்கையில் வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை அதிபர் தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த 2022ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்.,17ம் தேதி துவங்கி, அக்.,16ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை