உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இரு நாள் பயணமாக குவைத் செல்கிறார் பிரதமர் மோடி

இரு நாள் பயணமாக குவைத் செல்கிறார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இரு நாள் பயணமாக வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி குவைத் செல்கிறார்.இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, வளைகுடா நாடான குவைத் நாட்டின் மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர், அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரு நாள் பயணமாக வரும் 21- 22 ம் தேதிகளில் அரசுமுறை பயணாக குவைத் செல்கிறார். அங்கு மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர், குவைத் வெளியுறவு அமைச்சர் மற்றும் பட்டத்து இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மேலும் குவைத் வாழ் இந்தியர்களையும் சந்திக்கிறார். பிரதமர் மோடியின் இப்பயணத்தின் மூலம் இந்தியா- -குவைத் இடையே பரஸ்பரம் நட்புறவு மேலும் வலுப்பெறும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் குவைத் செல்வது இதுவே முதன் முறையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
டிச 19, 2024 08:41

அங்கே வம்சாவளி கிட்டே பேசி அரசியல் குட்டையை குழப்பாம வாங்க.


Ramaraj P
டிச 18, 2024 22:45

மோடி பிரதமர் ஆன பிறகு பார்லிமென்ட்டில் என்ன பிரச்சனை வந்தது சொல்ல முடியுமா?? ஜார்ஜ் சோரஸ் குரூப் சொல்வதை செய்யும் .i.n.d.i கூட்டணி.


பாமரன்
டிச 18, 2024 22:24

அதெப்படி திமிங்கிலம் எப்பல்லாம் பார்லிமென்ட் முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்குதோ அப்போல்லாம் கரீக்டா அரசு முறை பயணமாக நம்ம ஜி எஸ் ஆகிடறாப்ல...?? குளிர்காலத்தில் பிளேனு துருபுடிக்காம அப்பப்போ ஓட்டிட்டு இருக்கனும்தான்...அதுக்காக இப்படியா பண்றது... யாராவது கேள்வி கேட்டுடாதீங்க... அப்புறம் ஓ மை காட் ஓ மை காட் தான்...


veera
டிச 19, 2024 07:50

அமெரிக்கா தூரமா.... குவைத் தூரமா ....சொல்லு


Bye Pass
டிச 18, 2024 20:42

குவைத் நாட்டில் ஏராளமான இந்தியர்கள் வங்கி முதல் வணிகம் வரை ...ரஷ்யா குறைந்த விலையில் குருட் தரும்போது குவைத்திற்கு செல்வது என்ன பலன் தரும் ?


Haja Kuthubdeen
டிச 18, 2024 21:53

இதை அங்கு வேலை பார்க்கும் நம்நாட்டை சேர்ந்தவர்களிடம் கேளுங்கள்.என்ன பயன் என்று கூறுவார்கள்.


சமீபத்திய செய்தி