வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மீனவர் பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்குமா?
கொழும்பு: இலங்கைக்கு அடுத்த மாத துவக்கத்தில், பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், அதிபர் அனுரா குமார திசநாயகே தலைமையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வென்ற அனுரா குமார திசநாயகே, முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக, நம் நாட்டுக்கு டிசம்பரில் வந்தார். பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.இந்நிலையில், இலங்கை பார்லி.,யில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் நேற்று அளித்த பதில்:அண்டை நாடான இந்தியாவுடன் நாங்கள் மிகவும் நெருக்கமான உறவை பேணி வருகிறோம். எங்களது முதல் வெளிநாட்டு பயணமாக அந்நாட்டுக்கு சென்று, பல்வேறு ஒப்பந்தங்களை செய்தோம். ஏப்ரல் துவக்கத்தில் இலங்கைக்கு இந்திய பிரதமர் மோடி வருவார். அப்போது, சம்பூர் சூரிய சக்தி மின் நிலையம் திறக்கப்படும். மேலும், இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தேசிய நலனை பேணுவதற்காக பணியாற்றும் போது, எந்தப் பக்கமும் சாயாமல், எங்கள் வெளியுறவு கொள்கையில் நடுநிலையாக இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர் பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்குமா?