உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம்

சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன.அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து அதிபர் டிரம்ப் நாடுகடத்தி வருகிறார். அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை:கலிபோர்னியாவின் கவர்னர் கவின் நியூஸ்கம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் கரேன் பாஸால் தங்கள் வேலைகளைச் செய்ய முடியாவிட்டால், அது எங்களுக்கு தெரியாது. நாங்கள் தலையிட்டு பிரச்னையைத் தீர்ப்போம். கலவரங்கள் மற்றும் கொள்ளையர்களுக்கு அவர்கள் வழியில் பதிலடி கொடுப்போம். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஜூன் 08, 2025 12:31

டிரம்ப் செய்வது சரிதான். அமெரிக்கா நாட்டு மக்களுக்காக அவர் அதை செய்கிறார். தமிழகத்தில் அன்று அந்த ஓங்கோல் குடும்பத்தை விட்டதால், இன்று தமிழ் மண்ணின் சொந்த குடிமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.


V RAMASWAMY
ஜூன் 08, 2025 12:44

ரொம்ப சரி, வந்தேறிகள் சொந்த நாட்டு தமிழ் தாய் மொழியாக உள்ள மற்றவர்களை வந்தேறிகள் என்கின்றனர். கொடுமை, மகா கொடுமை. 2026ல் முடிவு கட்டவேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 08, 2025 19:34

வெளிநாட்டு மொழியில் எழுதுவார்கள் , பேசுவார்கள் , வழிபாடு நடத்துவார்கள் , ஆனால் உள்ளூர் மக்களை வந்தேறிகள் என்பார்கள் , அவர்கள் தான் உண்மையை மட்டும் பேசுவார்கள் என்றும் கூறுவார்கள் அவர்கள் பெயர் என்ன?


Amar Akbar Antony
ஜூன் 08, 2025 11:39

புலம் பெயர்ந்தவர்கள் யாரானாலும் அவர்கள் முறையாக வந்தவர்கள் இல்லையெனில் நாடு கடத்துவதில் எந்த நாடானாலும் எந்த தலைவரானாலும் சரி அவர் அவர் நாட்டிற்க்காக தான் நல்லது செய்கிறார் என்று பொருள். இந்த விஷயத்தில் ஆதரவளிப்போம். இங்கே வங்கி கள், ரோஹிங்கியாக்கள் என்று களவாணிகள் உண்டு அவர்க்கும் அதே கதிதான்.


Ramesh Sargam
ஜூன் 08, 2025 12:30

நீங்கள் கூறுவது சரிதான்.


Kasimani Baskaran
ஜூன் 08, 2025 10:18

புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் மெக்ஸிகோவில் இருந்து விவசாயம், விடுதிகளில் சிப்பந்திகள், வீட்டு வேலைகளில் ஈடுபடுபவர்கள். அது போக ஆசியாவில் இருந்து கள்ளத்தனமாக எல்லைகளை கடந்து அமெரிக்காவுக்குள் செல்வோர் ஏராளம். பெரும்பாலும் கலிபோர்னியா பொருளாதாரத்துக்கு இவர்கள் மிக அவசியம். ஆகவே இது பெரிய அளவிலான சிக்கலை உருவாக்கும் என்று கண்டிப்பாக நம்பலாம்.


Columbus
ஜூன் 08, 2025 10:13

This is the beginning of Civil War in USA. By end of 2028, California, an overwhelmingly Democratic Party stare, will be the first to break away from USA. Donald Trump will be the last President of USA and USA will not remain United after him.


vns
ஜூன் 08, 2025 10:58

No State will secede from USA. USA will remain a strong nation. No politician in USA is like our Rahul Gandhi, who is working hard to break up the country, again.


Venkatesan Srinivasan
ஜூன் 10, 2025 12:00

There cant be any hidden agenda like in our country India to accommodate vote bank politics. Illegal immigrants cant be allowed to stay in any country to do mean jobs. A country is administered by the tax payers money. So any individual cant harbour any illegal immigrant to theirs vims and fancies at the expense of other tax payers money. Let those individuals who wish harbouring pay all taxes on behalf of the immigrant. Cheap labour cant be at the risk of national security. Unlicensed illegal immigrants will become monsters in due course. Our India is also facing this type of illegal employment in some parts of our country.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை