உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா இனி உதவாது; சொல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

அமெரிக்கா இனி உதவாது; சொல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: 'ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவத்தை உருவாக்க வேண்டும். பாதுகாப்புக்கு இனி அமெரிக்கா உதவாது' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.உக்ரைனில் நடந்த பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் ஜெலன்ஸ்கி பேசியதாவது: ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவத்தை உருவாக்க வேண்டும். பாதுகாப்புக்கு இனி அமெரிக்கா உதவாது. அமெரிக்கா ஐரோப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ரஷ்யாவை எதிர்கொள்ள பாதுகாப்பு அவசியம். இதனால் பொது ராணுவத்தை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது.ரஷ்யாவிற்கு எதிரான தனது நாட்டின் போராட்டமக அதற்கான அடித்தளத்தை உருவாக்கி உள்ளது. ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவம் வேண்டும் என்பது குறித்து பல தலைவர்கள் நீண்ட காலமாக பேசி வருகின்றனர். உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம். நாடு பாதுகாப்பு உத்தரவாதங்களை விரும்புகிறது. இவ்வாறு அவர் பேசினார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையேயான தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு மாநாட்டில் உக்ரைனின் எதிர்காலம் முக்கியப் பொருளாக இருந்தது. 3 ஆண்டு கால ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு உருவாக்கி உள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

rama adhavan
பிப் 16, 2025 15:45

தெலுங்கு, ஹிந்தி,கன்னடம், உருது போன்ற வேறு மொழி பேசும் தமிழ்நாட்டில் வசிப்போர் தமிழ், ஆங்கிலமும் அறிந்து 3 மொழிகளில் புலமை பெற்றுள்ளனர். ஆனால் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் ஏன் 3 ஆவது மொழி அறியக்கூடாது?


Laddoo
பிப் 16, 2025 14:26

ஸிலின்ஸ்கி கவலைய விடுங்க. இங்கே சந்தானதுக்கு ஜோடியா சேந்து காமெடிக் காட்சில கலக்கலாம்


பேசும் தமிழன்
பிப் 16, 2025 12:16

அடுத்த நாட்டுக்காரன் பேச்சை கேட்டு சொந்த நாட்டு மக்களையே அழித்து விட துணிந்த பாவி..... இவனை தேர்ந்தெடுத்த பாவத்தை உக்ரைன் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.


M Ramachandran
பிப் 16, 2025 11:48

கூடி கூடி பேசினாலும் இனி யாரும் தங்கள் கையயை சுட்டு கொள்ள மாட்டார்கள். இனி அடங்கு முன்னிருந்த அமெரிக்கா அதிபதியை தேடு அவனை கேளு உன்னாலா நான் கேட்டேன். அதற்க்கு பாதில் கேள் ரொம்பா ஓவரா துள்ளுநீர். இப்போது அம்போ.


Sivagiri
பிப் 16, 2025 11:32

ஒரே தீர்வுதான் இருக்கு , ஜெலின்ஸ்கியை ஜெயிலில் போட்டு விட்டு வேற ஆளை தேர்ந்தெடுப்பது . .


Anbuselvan
பிப் 16, 2025 11:12

அதிபர் டிரம்ப் அவர்கள் அமெரிக்காவிற்கு நஷ்டம் விளைவிக்கும் எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கையும் அதன் அடிப்படையில் வந்ததுதான். இவரது சீனா மீதான அணுகுமுறையை இந்த உலகம் எதிர்பார்த்து உற்று நோக்கி கொண்டு இருக்கிறது.


கிஜன்
பிப் 16, 2025 11:05

நீங்க கொஞ்ச ஆட்டமா ஆடுனீங்க .... கிரிமியா விலும் ...மரியுபோலிலும் ... ருசியர்களை எவ்வளவு கொடுமை படுத்தினீர்கள் ... அமெரிக்கவா உங்களை அப்படி செய்யச்சொன்னது ? மாறிவரும் ஜியோ பாலிடிக்ஸை புரிந்துகொள்ளாமல் தேவையற்ற சண்டையை இழுத்தீர்கள் .... டிரம்ப் கெட்டிக்காரர் ...உங்களை நன்கு புரிந்துகொண்டார் ...


கிஜன்
பிப் 16, 2025 11:05

நீங்க கொஞ்ச ஆட்டமா ஆடுனீங்க. கிரிமியாவிலும் ... மரியுபோலிலும் ... ருசியர்களை எவ்வளவு கொடுமை படுத்தினீர்கள் ... அமெரிக்கவா உங்களை அப்படி செய்யச்சொன்னது ? மாறிவரும் ஜியோ பாலிடிக்ஸை புரிந்துகொள்ளாமல் தேவையற்ற சண்டையை இழுத்தீர்கள் .... டிரம்ப் கெட்டிக்காரர் ...உங்களை நன்கு புரிந்து கொண்டார் ...


MUTHU
பிப் 16, 2025 10:43

ரஷ்யா அள்ள அள்ள குறையாத வளங்கள் கொழிக்கும் மிகப்பெரும் நாடு. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவினிடம் ஏதாவதொரு வகையில் கடன்பட்டிருப்பார்கள். அவர்களை பகைக்க விரும்ப மாட்டார்கள்.


Pallava Rajan
பிப் 16, 2025 10:43

Too Late zelensky. you hv been made a joker from day one, which you never understood, you made your country to loose lives, money, infrasture, and your innocent people have become refugees. You were too selfish to become an european country and finally lost your country. you were not smart enough to understand either europe nor usa as their idea was to sell their weapons and grab your oil and land resources. Start growing at least from now and save your country


முக்கிய வீடியோ