உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு; அதிபர் டிரம்பிற்கு நன்றி சொன்னார் புடின்!

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு; அதிபர் டிரம்பிற்கு நன்றி சொன்னார் புடின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: உக்ரைனுடனான 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு, ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு, அதிபர் டிரம்பிற்கு புடின் நன்றி தெரிவித்தார்.கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளை கடந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவியேற்றதும், இந்த போரை நிறுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.போர் நிறுத்தம் தொடர்பாக, மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் அமெரிக்கா, உக்ரைன் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, 30 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள உக்ரைன் ஒப்புக்கொண்டது; அதிபர் ஜெலன்ஸ்கியும் அதை உறுதி செய்தார்.போர் நிறுத்த திட்டத்துடன், ரஷ்யாவுக்கு அமெரிக்க துாதர்கள் சென்றனர்.இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து, ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் முயற்சிகளுக்கு நன்றி. இந்த யோசனை சரியானது. இதை நிச்சயமாக நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் நாம் விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் நிறைய உள்ளன. நமது அமெரிக்க சகாக்களுடன் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க டிரம்பை அழைக்க முடிவு செய்துள்ளோம். இந்த மோதலை அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எந்தவொரு போர் நிறுத்தமும் நீடித்த அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கிஜன்
மார் 14, 2025 07:01

கண்டிஷனல் அப்ரூவல் தான் கொடுத்திருக்கிறார் .... பாட்டி காலத்து ...குரங்கு அப்பம் பங்கிட்ட கதை நினைவுக்கு வருகிறது ....


M R Radha
மார் 14, 2025 08:39

குமுதம் வார இதழின் பிரச்னையை ஆப்பத்தை தின்று தீர்த்து வைத்த கட்டுவின் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே


USER_2510
மார் 14, 2025 06:46

ரஷ்யா அமெரிக்காகிட்ட அடங்கிபோய்ட்டானு தான் தெரியுது . என்னிக்குமே பெரிய அண்ணன் பெரிய அண்ணன் தான.. நோ டவுட்


visu
மார் 14, 2025 09:04

அடங்கி போகவில்லை அமைதியா தன் வேலையை மட்டும் பார்க்கிறார் என்றைக்கும் அமெரிக்கா சீனாவுடனோ ரஷ்யாவுடனோ நேரிடையா மோத போவதில்லை டிரம்ப் அதிக பேட்டி கொடுப்பார் புடின் அவசியமானால் மட்டுமே பேசுவார் இஸ்லாமிய கைதிகள் குடியேற்றத்தில் ஐரோப்பா பல நாடுகள் அதிருப்தியில் உள்ளன யார் எந்த பக்க ம் போவாங்க தெரியாது


Anand
மார் 14, 2025 11:18

//ஆனால் நாம் விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் நிறைய உள்ளன.// புடினின் இந்த கண்டீஷன் தான் ட்ரம்ப், ஜெலன்ஸ்கி மற்றும் மேற்கத்திய நாடுகளை ஆப்பசைத்த குரங்கு போல் விழிக்க செய்யும்......


முக்கிய வீடியோ