உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடி சொன்ன விஷயம்; வியந்து பாராட்டிய புடின்

பிரதமர் மோடி சொன்ன விஷயம்; வியந்து பாராட்டிய புடின்

செர்பியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் எமிர் குஸ்தூரிகா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நேர்காணல் ஒன்றை நடத்தினார்.அதில் அதிபர் புடின் கூறியதாவது:சமீபத்தில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய போது, இந்தியா குறித்து பல விஷயங்களை விவாதித்தேன். குறிப்பாக, மொழி, கலாசாரம், பண்பாடு உள்பட பல விஷயங்களில் இந்தியர்களின் ஈடுபாடு குறித்து இருவரும் பேசினோம். அப்போது, பிரதமர் மோடி சொன்ன ஒரு விஷயம் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இந்தியாவில், 150 கோடி பேர் வசிக்கின்றனர். அங்கு, ஹிந்தி தான் பிரதான மொழியாக உள்ளது. ஆனால், 150 கோடி பேரில், 60 முதல் 70 கோடி மக்கள் மட்டுமே முதன்மை மொழியான ஹிந்தியை பேசுகின்றனர். மீதமுள்ள மக்கள் தங்கள் பிராந்திய மொழிகளையே பேசுகின்றனர். அதாவது, அந்நாட்டு மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே முதன்மை மொழியை பேசுகின்றனர். மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவர்கள் ஒரு பொது மொழியை பேசினாலும், பல நுாறு மொழிகள் மற்றும் கலாசாரங்களை கொண்ட மக்கள் எவ்வித பிரச்னையும் இன்றி அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இணைந்து வாழ்வது மிகவும் வியப்பான ஒன்று. இந்தியாவின் மொழி பன்முகத்தன்மை என்னை வியப்பில் ஆழ்த்தியது.இந்தியாவின் நாகரிகம் மிகவும் பழமையானது. அதன் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. பிரதமர் மோடியுடனான சமீபத்திய உரையாடல், இந்தியாவின் கலாசார மற்றும் மொழிச்செழுமை குறித்த என் புரிதலை மேலும் ஆழப்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
நவ 22, 2026 21:56

மொழிவழியில் உக்ரேன் நாட்டைப் பிளவுபடுத்தி முழுங்க முயற்சிக்கிறார் புடின் அதை நியாயப்படுத்த பாரதத்தை இழுப்பது மட்டமான சிந்தனை.


கிஜன்
நவ 22, 2026 21:49

அன்பைத் தரும் அன்னைத் தமிழை பற்றியும் பேசி இருக்கலாம்… ஒருவருமே திணிக்காமல் அது எப்படி சில நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கிறது என்றும் வியந்திருக்கலாம்


V Narayanan
நவ 22, 2026 21:47

இந்தியை திணிக்காமல் இருந்தால் போதும்


ragu
நவ 22, 2026 22:34

நாராயணா கும்மிடிப்பூண்டி தாண்டி போக முடியாது


Rajan
நவ 22, 2026 23:21

ஹிந்தி நான் படிப்பேன் என் பரம்பரை முழுதும் படிக்கும்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 22, 2026 21:01

திராவிட மாடல் 1.0 மற்றும் திராவிட மாடல் 2.0 பத்தி புடினுக்குத் தெரியலைன்னு புரியுது .....


முக்கிய வீடியோ