உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எல்லையில் பதற்றத்தை குறைக்க சீனாவுக்கு ராஜ்நாத் 4 யோசனைகள்

எல்லையில் பதற்றத்தை குறைக்க சீனாவுக்கு ராஜ்நாத் 4 யோசனைகள்

கிங்டாவ்: சீனா சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு ராணுவ அமைச்சர் டாங் ஜூன்னுடன் நேற்று பேசினார். அப்போது, சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கவும், உறவை மேம்படுத்தவும் நான்கு திட்டங்களை அவரிடம் விளக்கினார்.

நடவடிக்கை

நம் அண்டை நாடான சீனாவின் கிங்டாவ் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்தியா சார்பில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இதன் நடுவே, அந்நாட்டு ராணுவ அமைச்சர் டாங் ஜூன்னை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேசினார்.டாங் ஜூன்னுக்கு, புகழ்பெற்ற பீஹாரின் மதுபானி ஓவியத்தை ராஜ்நாத் சிங் பரிசளித்தார். இந்த சந்திப்பு குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும், அதற்கு இந்தியாவின் பதிலடியான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை குறித்தும் சீன அமைச்சர் டாங் ஜூனிடம் ராஜ்நாத் சிங் விளக்கினார். சீன எல்லைகளில் பதற்றங்களை தணிப்பதற்கும், எல்லைகளை நிர்ணயிப்பதற்கான தற்போதைய வழிமுறையைப் புதுப்பிப்பதற்கும், இதற்கென கட்டமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இரு நாடுகளும் சிக்கலான பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என, இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. இரு அமைச்சர்களும் தற்போதுள்ள வழிமுறைகள் வாயிலாக, போர் நிறுத்தம், பதற்றத்தை தணித்தல், எல்லை மேலாண்மை மற்றும் இறுதியில் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்னைகளில் முன்னேற்றம் அடைய பல்வேறு மட்டங்களில் ஆலோசனைகளைத் தொடர ஒப்புக்கொண்டனர். இருதரப்பு உறவுகளில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படுவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான துாதரக உறவுகள் நிறுவப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன் முக்கிய மைல்கல் குறித்து டாங்கிடம் எடுத்துரைத்த சிங், ஆறு ஆண்டு இடைவெளிக்கு பின், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சீன எல்லை வழியாக மீண்டும் துவங்கப்பட்டதற்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தார்.

புதிய செயல்முறை

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் எல்லையில் பதற்றத்தை குறைத்து அமைதி நிலவவும், உறவை மேம்படுத்தவும் நான்கு திட்டங்களை ராஜ்நாத் விளக்கினார்.அதன்படி, கடந்தாண்டு ஒப்புக்கொள்ளப்பட்ட படைக்குறைப்பு திட்டத்தை பின்பற்றுதல், எல்லை பதற்றத்தை குறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுதல்.எல்லை வரையறைக் கான முயற்சிகளை துரிதப்படுத்துதல், கருத்து வேறுபாடுகளை குறைப்பதற்கும், உறவுகளை மேம்படுத்துவதற்கும் புதிய செயல்முறைகளை தயாரிக்க சிறப்பு பிரதிநிதிகளை பயன்படுத்துதல் போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய அமைச்சருடன் சந்திப்பு

ரஷ்ய ராணுவ அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவ் உடனான சந்திப்பு குறித்து நம் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இரு தலைவர்களும் புவிசார் அரசியல் சூழ்நிலைகள், எல்லைதாண்டிய பயங்கரவாதம் மற்றும் இந்தியா - -ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு, ஆப்பரேஷன் சிந்துார் மற்றும் அதன் விளைவாக ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தின் பின்னணியில் நடந்தது. ரஷ்ய தரப்பில் இரண்டு தவணைகளாக தரப்பட வேண்டிய எஸ்  - 400 வான்பாதுகாப்பு ஏவுகணைஅமைப்புகளை விரைவில் வழங்க கூட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. சுகோய் - 30 மார்க் 1 போர் விமானங்களை மேம்படுத்துதல், உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். ரஷ்ய அமைச்சரைத் தொடர்ந்து, பெலாரஸ், ​தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ராணுவ அமைச்சர்களையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜூன் 28, 2025 20:41

இந்தியாவின் யோசனையை சீனா ஏற்குமா?


ஆரூர் ரங்
ஜூன் 28, 2025 10:29

இன்றுவரை சீன இந்திய எல்லைக் கோடு நிர்ணயம் செய்யப்படவில்லை. வர்த்தகப் போட்டியில் வெல்வதற்காக இந்தியாவின் எதிரி நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டு கடன் வழங்கி அடிமையாக்கி வருகிறது. இப்படிப்பட்ட சீனா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள காங்கிரசை இன்னும் தடை செய்யாமல விட்டுவைத்திருப்பது நாட்டுக்குக் கேடு.


Ramkumar Ramanathan
ஜூன் 28, 2025 08:41

China has boundry disputes with all its neighbouring countries. it wants to enlarge the country in each and every direction. it's leaders are greedy and no World vision, but they are called communists. what a shame to Marx and Lenin


T. சங்கரநாராயணன், ஈரோடு
ஜூன் 28, 2025 08:36

நீங்க யோசனை சொல்வதெல்லாம் இருக்கட்டும் சீனர்கள் காதில் வாங்கிக் கொள்கிறார்களா என்று பாருங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை