உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நியூயார்க்கில் ராமர் கோவில் தேர் பவனி; களைகட்டிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் கொண்டாட்டம்

நியூயார்க்கில் ராமர் கோவில் தேர் பவனி; களைகட்டிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் கொண்டாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: நியூயார்க்கில் அயோத்தி ராமர் கோவில் போன்ற வடிமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பை நடத்தி வெளிநாடுவாழ் இந்தியர்கள் சுதந்திர தின விழா கொண்டாடினர்.உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ராமர் கோவில் மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்டது. இதனை பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் திறந்து வைத்தார். இது ஹிந்துக்களின் அடையாளம் என்று உலகம் முழுவதும் பாராட்டுப் பெற்றுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=90jfb88t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அலங்கார ஊர்தி

இந்த நிலையில், நியூயார்க் நகரில் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்திய சுதந்திர தின விழா பேரணி நேற்று நடைபெற்றது. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்று, நகரை வலம் வந்தன.

ராமர் கோவில்

குறிப்பாக, 19 அடி நீளம், 9 அடி அகலம், 9 அடி உயரம் கொண்ட அயோத்தி ராமர் கோவில் போன்ற வடிவமைப்பு கொண்ட வாகனமும் இடம்பெற்றிருந்தது.

நடிகை

இந்த ராமர் கோவில் போன்ற வடிவமைப்பு இந்தியாவில் உருவாக்கப்பட்டு, விமானம் மூலம் நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாகும். இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா, பன்கஜ் திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர். மதப்பாடல்கள் ஒலிப்பரப்பட்டு, இசைக்கருவிகள் இசைக்க, மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Raj
ஆக 20, 2024 08:53

முதலில் ஜாதி வெற்றுமய விட்டு அணைவரும் ஒன்று படுவோம்.


Ranganathan
ஆக 19, 2024 22:15

Agree. Besides, why are the songs only in Hindi? What about other languages? The so-called dancing looks horrible.


Easwar Kamal
ஆக 19, 2024 19:54

இது மாதிரி தேவை இல்லாத செயலில் இடுபடுவதால்தான் எங்களை போன்ற சாதாரண மக்கல் தாக்க படுகிறார்கள். அமெரிக்கா எல்லா நாடுகளின் முக்கிய நாட்கள் கொண்டாட்டங்களுக்கு அனுமதிகிறது அது போதாதா ? மேலும் மதங்களுக்கு ஊர்வலம் எல்லாம் ஏன் அனுமதி கொடுக்கிறது. இந்தயாவை நாசமாக்கியச்சு இப்போது அடுத்து அமெரிக்கா. அமெரிக்கா இது போன்ற நிகழ்வகளுக்கு அனுமதிக்க கூடாது.


Sridhar
ஆக 19, 2024 14:02

பல எதிர்ப்புக்களை மீறி இந்த ஊர்வலம் நடந்திருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்களின் உறுதியான நாட்டுப்பற்றை வெளிக்காட்டுகிறது. இடதுசாரிகளின் மனப்பான்மை மாறும்வரை இந்த போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும்.


Ramesh Sargam
ஆக 19, 2024 13:17

உலகெங்கிலும் ஹிந்துமதம் திணிக்கப்படாமலேயே பரவி வருகிறது சந்தோஷத்தை அளிக்கிறது. ஆனால் வெட்கக்கேடு இந்தியாவில் தமிழகம் போன்ற மாநிலங்களில் ஹிந்து மதத்தை அழிக்க அங்குள்ள திராவிட கட்சிகள் கடுமையாக செயற்படுகின்றனர்.


Indian-இந்தியன்
ஆக 19, 2024 13:57

உண்மை


தமிழ்வேள்
ஆக 19, 2024 14:13

ஹிந்து தர்மத்தை , அதன் பண்பாடு , தினசரி கர்மாநுஷ்டானங்களை ஒழிப்பதற்காக , சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதற்காக , திராவிடத்தால் வாட்டிகனோடு ஒப்பந்தம் போடப்பட்டது 1967 வாக்கில் ...அதற்கான சன்மானங்கள் இன்னும் வந்து கொண்டிருப்பதால் தொடர்கிறது.....தற்போது அந்த லிஸ்டில் மூர்க்கமும் சேர்ந்துகொண்டதால் இன்னும் ஆவேசம் கூடியுள்ளது ...கோழிப்பிரியாணி [நிஜமாகவே கோழியா அல்லது காக்காயா ?] கோட்டருக்கு ஓட்டுப்போடும் கும்பல் irukkum வரை இது தொடரும் ...இல்லையேல் பாரத சர்க்கார் ஏதாவது கடுமையான நடவடிக்கை எடுத்து , ஒடுக்கினால் உண்டு .


முக்கிய வீடியோ