உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இதயங்களை இணைக்கும் ராமாயணம்; பிரதமர் மோடி பெருமிதம்

இதயங்களை இணைக்கும் ராமாயணம்; பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாங்காங்: கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ராமாயணம் இணைக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.தாய்லாந்தின், பாங்காக் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், தாய்லாந்துவாழ் இந்தியர்கள் அதிக அளவில் திரண்டு, இந்திய தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.வேத மந்திரங்களை ஓதியும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். பின்னர், தலைநகர் பாங்காக்கில், அந்நாட்டு கலைஞர்கள் நிகழ்த்திய ராமாயண நாட்டிய நாடகத்தை பிரதமர் மோடி ரசித்து பார்த்தார்.இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர், 'ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ராமாயணம் இணைக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Gnana Subramani
ஏப் 04, 2025 06:04

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும் போது, அதில் கலந்து கொள்ளாமல் எதற்கு இந்த தேவை இல்லாத சுற்றுப் பயணம்.


A1Suresh
ஏப் 03, 2025 17:51

ஸ்ரீராமநவமி காலத்தில் ஸ்ரீமத் ராமாயண நாடகத்தை பார்த்து ரசித்தார் மோடிஜி. வாழ்க


அப்பாவி
ஏப் 03, 2025 17:12

ராமாயணம் பாக்க இங்கிருந்து சொகுசு விமானத்தில் பயணம். யாரோட செலவிலே?


Sampath Kumar
ஏப் 03, 2025 16:38

தொடர் தாக்குதல் தமிழ் மீது தொடர்கிறது இங்கு உள்ள அரு முடிந்தவரை போராஅடி வருகிறது ஆனால் மக்கள் இன்னும் விழிப்பு அடைய வில்லை ஒரு திருக்குறளுக்கு உள்ள பெருமையும் மதிப்பும் இந்த இராமாயணத்தில் மகாபாரதத்திலும் கிடையாது கிடையாது கிடையவே கிடையாது என்ன செய்ய பிஜேபி காரணிக்கு சோம்பு அடிக்கும் வேலையைத்தான் இங்கு உள்ள டுமிழர்கள் செய்து வருகிறார்கள் தமிழ் இனி மெல்லஅல்ல வேகமாக சாகும் அப்போதும் டுமிழன் விழிப்பு அடையமாட்டான் அம்புட்டு தூரம் மூளை சலவை செய்யப்பட்டு உள்ளான்


ஆரூர் ரங்
ஏப் 03, 2025 17:03

அதனால்தான் திருக்குறளை ஈவேரா தங்கத் தட்டில் வைக்கப்பட்ட கழிவு ன்னு சொன்னாரா?. திராவிஷ மூளைச்சலவை ரொம்ப டேஞ்சர்.


Kumar Kumzi
ஏப் 03, 2025 17:32

ஓசிகோட்டர் கூமுட்ட திருட்டு திராவிஷ குடும்பத்துக்கு பல்லக்கு தூக்க கெளம்பிட்டான்..த்தூ


Padmasridharan
ஏப் 03, 2025 16:23

பொருளாதாரத்தை நினையாத ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்த ராமர்_சீதை அந்தக்காலம். இக்காலத்தில் பொருளாதாரத்தை வளர்க்க, பிரிந்து வாழத்துடிக்கும் சுதந்திர ராமர்கள்_சீதைகள் அதிகமாக காணப்படுகிறார்கள்


Suresh Sampath
ஏப் 03, 2025 15:55

தமிழ் இனி மெல்லச் சாகும் என்பது சரி தான். ராமாயணம் என்று எழுதுவது தவறு. இராமாயணம் என்று எழுதுவதே சரி.


Barakat Ali
ஏப் 03, 2025 15:10

அந்நாட்டு கலைஞர்கள் நிகழ்த்திய ராமாயண நாட்டிய நாடகத்தை பிரதமர் மோடி ரசித்து பார்த்தார் ......


புதிய வீடியோ