உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் அரங்கேற்றப்பட்ட ராமாயணம்: நாடகக் குழுவினருக்கு குவிகிறது பாராட்டு

பாகிஸ்தானில் அரங்கேற்றப்பட்ட ராமாயணம்: நாடகக் குழுவினருக்கு குவிகிறது பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில், ராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதற்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மவுஜ் என்ற நாடக குழுவினர் செயற்கை நுண்ணறிவு உதவியுன் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தனர். நாடகத்தை யோகேஸ்வர் கரேரா என்பவர் இயக்கியுள்ளார். இந்த நாடகத்துக்கு மக்கள் இடையே வரவேற்பும், விமர்சகர்களின் பாராட்டுகளும் கிடைத்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iuk31dij&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக யோகேஸ்வர் கூறுகையில், ராமாயணத்தை மேடையில் அரங்கேற்றியது சிறப்பானது. இதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனால் எந்த பின்னடைவும், பாதுகாப்பு சவால்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். உமைர் அலவி என்ற விமர்சகர் கூறுகையில், ' கதை சொல்வதில் உள்ள நேர்த்தியிலும், நேரடி இசை , வண்ணமயமான உடைகள் மற்றும் மனதை தொடும் வடிவமைப்புகள் அனைத்தும் நிகழ்ச்சியின் பிரமாண்டத்துக்கு கூடுதல் அழகை கொடுத்தது. உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான மக்களை எதிரொலிக்கும் ஒரு நிகழ்வு என்பதால், சிறப்பாக அமைந்தது எனத் தெரிவித்தார். ராமாயண நாடகத்தை தயாரித்த ராணா காஸ்மி, சீதையாக நடித்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Murugan Gurusamy
ஜூலை 16, 2025 13:43

தமிழனுக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம், ராமாயணம் என்பது என்ன என்று நேரு எழுதிய டிஸ்கோவேரி ஒப் இந்தியா படி. பாக்கிஸ்தான் மற்றும் வடக்கன்ஸ் ஒரே டி என் எ தானே


Mohamed Ishaq
ஜூலை 16, 2025 11:08

ஒரு இஸ்லாமிய நாட்டில் ராமாயணம் நாடகம் நடத்த முடிகிறது அதுவும் சிறப்பாக ஆனால் மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நம் நாட்டில் இஸ்லாமியர்கள் மசூதிகளில் ஒலிபெருக்கி வைத்து பாங்கு சொல்லக் கூடாதாம் ஆனால் அவன் பெயர் தீவிரவாதி நாம் காந்தியவாதி ?


Kannan
ஜூலை 18, 2025 21:49

தடை செய்யப்பட்ட கூம்பு ஒலிபெருக்கி எந்த மதத்தினரும் எந்த அரசியல் கட்சியினரும் பயன்படுத்துவது ஒலி மாசினால் நமக்கே துன்பம். ஆனால் யாராகிலும் மனிதனால் ஏற்றுக்கொள்ள கூடிய சத்தத்தில் ஒலிபெட்டியை உபயோகிக்கலாம் நண்பரே..


அப்பாவி
ஜூலை 16, 2025 06:50

தற்கொலை, வெடி குண்டுக்கு பயந்து யாரும் போயிருக்க மாட்டாங்க.


Suresh Sampath
ஜூலை 15, 2025 23:02

ராமாயணம் அல்ல இராமாயணம்.


sridhar
ஜூலை 15, 2025 22:14

அவன் கூட திருந்திடுவான் , இந்த போலி திராவிட பதர்கள் திருந்தாது .


Krishnamoorthy Perumal
ஜூலை 15, 2025 22:10

ஜெய் ஸ்ரீ ராம்


ஈசன்
ஜூலை 15, 2025 21:52

நம் நாட்டில் காவல் துறையிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும். அங்கே ராணுவத்திடம் அவர்களின் மேலதிகாரி தீவிரவாதிகளிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும். இல்லை என்றால் இந்த ஒரு முறை தப்பி விட்டார்கள். மீண்டும் இது போன்ற இந்திய இதிகாச புராணங்களை கொண்டு நாடகம் நடத்துவது நல்லதல்ல. மக்கள் வரவேற்பு என்பது வேறு. அடிப்படைவாதிகள் கொள்கைகள் வேறு. நாடகம் நடத்தியவர்களுக்கு பாராட்டுகள். ஆனால் ஜாக்கிரதை.


ராமகிருஷ்ணன்
ஜூலை 15, 2025 21:24

இந்தியாவுடன் ஏற்பட்ட போரில் தோற்றதை விட இதற்கு அதிகம் வருத்தப்பட்டு கோபமாகி விடுவார்கள் ஜாக்கிரதை.


Rathna
ஜூலை 15, 2025 20:02

1930-40 களில் கராச்சி, லாஹூர் போன்ற நகரங்களில் மாதம் ஒரு முறை நடந்த ராமாயணம் நிகழ்ச்சி இப்போது exhibition பொருட்களை வைப்பது போல இப்போது மூர்க்க நகரங்களில் நடக்கிறது.


Ramesh Sargam
ஜூலை 15, 2025 19:58

பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு அவ்வளவு அச்சுறுத்தல் இருந்தும், இந்த குழுவினர் மிக தைரியமாக ராமாயணத்தை அரங்கேற்றியிருப்பது மிக மிக சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் இனி அவர்கள் மிக மிக எச்சரிக்கையாக செயல்படவேண்டும். வாழ்த்துக்கள் இந்த அரங்கேற்றத்துக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை