உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; ஆனால்...: புடின் சொல்ல வருவது என்ன?

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; ஆனால்...: புடின் சொல்ல வருவது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: '' உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது முக்கிய இலக்கை அடைவதில் உள்ளோம், '' என ரஷ்யா அதிபர் புடின் கூறியுள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர நடந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதுவரை நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனையடுத்து ரஷ்யா மீது அடுத்தடுத்து பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றன.இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷ்யா போரை நிறுத்தவில்லை என்றால், இன்னும் தடைகள் விதிக்கப்படும். ரஷ்யா உடன் வர்த்தத்தில் ஈடுபடும் நாடுகளும் தப்ப முடியாது என எச்சரித்து இருந்தார். இதனிடையே, அடுத்த வாரம் மூன்றாவதுகட்டமாக அமைதி பேச்சுவார்த்தைய தொடர உக்ரைன் விருப்பம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: உக்ரைன் உடனான பிரச்னையை அமைதியான முறையில் விரைவில் தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம் என ரஷ்ய அதிபர் புடின் பல முறை கூறியுள்ளார். இது நீண்ட கால நடவடிக்கை. இதற்கு கடின முயற்சி தேவை. அது எளிதானது அல்ல. லட்சியத்தை அடைவதே எங்களுக்கு முக்கியமான விஷயம். எங்களது லட்சியம் தெளிவாக உள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கடுமையான வாதங்களுக்கு உலகம் பழகிவிட்டது. ஆனால், ரஷ்யா உடன் ஒரு சமாதான உடன்படிக்கையைத் தொடர டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ