உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமைதி திட்டம் குறித்து பேசத் தயார்; மவுனம் கலைத்தார் ரஷ்ய அதிபர் புடின்

அமைதி திட்டம் குறித்து பேசத் தயார்; மவுனம் கலைத்தார் ரஷ்ய அதிபர் புடின்

மாஸ்கோ: உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து ரஷ்ய அதிபர் புடின் மவுனம் கலைத்துள்ளார்.உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பை ரஷ்யா கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ரஷ்யப் படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் அந்நாட்டு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி திட்டத்தை முன்மொழிந்து உள்ளார். இதற்கு உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நிருபர்களிடம் புடின் கூறியதாவது: அமெரிக்காவின் அமைதி திட்டம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எதிர்கால ஒப்பந்தமாக மாறக்கூடும். இது தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை விட்டு வெளியேறினால், நாங்கள் போர் நடவடிக்கைகளை நிறுத்துவோம். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நாங்கள் அதை ராணுவ நடவடிக்கை மூலம் அடைவோம். உக்ரைனின் சட்டவிரோத தலைமையுடன் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திடுவது அர்த்தமற்றது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்தபோது தேர்தலை நடத்த மறுத்ததால் உக்ரைன் தலைமை தனது சட்டப்பூர்வத் தன்மையை இழந்தது. இவ்வாறு புடின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சிட்டுக்குருவி
நவ 28, 2025 01:20

போர் காலங்களில் தேர்தல் நடத்தக்கூடாது என்று அவர்கள் சட்டத்தில் இருப்பதாக கூறுகின்றார்கள் .ரஷ்யா தேர்தல் நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் என்றும் அதிபர் புடினேதான் .அதனால் ரஷ்யாவில் தேர்தல் பற்றி யாரும் கவலைப்படவேண்டாம் .அதனால் ரஷ்யா போரை நிறுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ருசியாவைப்போல் ல்லாமல் தேர்தல் நடத்துவார்கள் .


மணிமுருகன்
நவ 28, 2025 00:02

ரஷ்ய நடவடிக்கை நியாயமானது வீம்புக்கு விவாதம் பண்ணுவது பயனற்றது ஒப்பாரி வைக்கவும் தகுதி வேண்டும் ஓங்கி காற்றடித்தால் ஓடிந்து விழும் குச்சியும் ஊதுனா பறக்கும் பேப்பர் வீறாப்பு ரவுடி வேஷம் போடுவது வடிவேலு காமெடியே இவனுகளுக்கு அரைகுறை அரைவேக்காடு ஒப்பந்தம்


ram
நவ 27, 2025 22:26

ரஷ்யா மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்