உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம்; கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் அறிவிப்பு

பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம்; கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் அறிவிப்பு

ஒட்டாவா: பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த சூழ்நிலையில், பாலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா ஆஸ்திரேலியா நாடுகள் அறிவித்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s2hy1t10&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 பிரிட்டன் இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியதாவது: மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் மோதலுக்கு தீர்வு காணும் வகையில், பாலஸ்தீனத்தை அரசாக நாங்கள் முறையாக அங்கீகரிக்கிறோம். இரு நாடுகளுக்கு இடையான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று நான் தெளிவாக கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த அறிவிப்பு ஹமாஸ் படையினருக்கு அளிக்கும் வெகுமதி என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது. கனடா பிரிட்டன் பிரதமரின் அறிவிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த முதல் ஜி7 நாடாக கனடா ஆனது. பிரதமர் மார்க் கார்னி 'பாலஸ்தீன அரசு மற்றும் இஸ்ரேல் அரசு இரண்டிற்கும் அமைதியான எதிர்காலம் உருவாகும். பாலஸ்தீனத்தை அரசாக அங்கீகரிக்கிறோம்', என்றார். ஆஸ்திரேலியாசிறிது நேரத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது அரசாங்கம் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார். பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய, பிரிட்டன், கனடா ஆகிய மூன்று நாடுகள் அறிவிப்பு வெளியிட்டதும் இஸ்ரேல் தலைவர்கள் கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Chandru Pushpa
செப் 22, 2025 08:07

ஆம். உண்மை. அமெரிக்காகாரன் பாக்கிஸ்தான் ஐ ஆதரித்தத்தை போல.


kumarkv
செப் 21, 2025 22:43

அது எங்க இருக்கு கத்தரில்லா


visu
செப் 21, 2025 21:40

இல்லாத நாட்டை ஆதரித்தால் தீவிரவாதம் தான் வளரும் அதைத்தான் UK கனடா ஆகிய நாடுகள் செய்து வருகின்றன போர் முடிவது போல் வந்தால் இந்த நாடுகள் ஹமாஸுக்கு ஆதரவு அளித்து போரை தொடர ஏற்பாடு செய்கிறார்கள்


GMM
செப் 21, 2025 21:29

பாகிஸ்தான், பாலஸ்தீன போன்ற ஆக்கிரமிப்பு பகுதி அங்கீகாரம் குற்ற செயலுக்கு அங்கீகாரம். ஒரு நில பகுதியை முறையாக வளப்படுத்தும் சமூகம் தான்,வாழ உரிமை கொண்டாட முடியும்.கனடா...ஆக்கிரமிப்பவர்களை ஏற்றால் கஷ்டத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.


Kumar Kumzi
செப் 21, 2025 21:16

அதுசரி இஸ்ரேலின் அனுமதியின்றி எப்படி நடைமுறை படுத்துவானுங்க


சுந்தர்
செப் 21, 2025 21:15

தனக்கு வந்தால்தான் தெரியும் அவர்களுக்கு. என்றாவது ஒரு நாள் உணர்ந்து கொள்வர்.


Rathna
செப் 21, 2025 21:11

அமெரிக்கா இருக்கும் வரை இது நடக்காது என்பதே உண்மை.


ஜெகதீசன்
செப் 21, 2025 20:34

இவங்க அறிவிச்சு என்ன பயன்? பாலஸ்தீனம் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.எங்கே அரசு இருக்கு?


Nandakumar Naidu.
செப் 21, 2025 20:17

தீவிரவாதத்திற்கு ஆதரவு என்று அர்த்தம். ஆதரவு கொடுப்பவர்களையே தூக்கி போட்டு மிதிப்பார்கள் என்று இன்னும் புரிந்து கொள்ளாதவர்கள்.


மனிதன்
செப் 21, 2025 21:04

ஈவு, இரக்கம், மனசாட்சி, பச்சாதாபம்,அன்பு, கருணை, குற்றவுணர்ச்சி இதெல்லாம் என்னவென்றே அறியாத இஸ்ரேல் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கொன்று குவித்திருக்கிறது...அவனுக்கு வக்காலத்து வாங்கும் யாராக இருந்தாலும் அதே போன்ற குரூரர்கள்தான்..மனிதனாக இருக்கவே தகுதியற்றவர்கள்....


ராஜாராம்,நத்தம்
செப் 22, 2025 03:58

சும்மா இருந்த இஸ்ரேலை சொறிஞ்சி விட்டுட்டு அவன் போட்டு தாக்கும் போது இப்ப மட்டும் ஞாயம் தர்மம்னு பேசிக்கிட்டு இருக்க மனிதன் என்ற பெயரில் இருக்கும் மூர்க்கனே மனித நேயத்தோடு உன் கருத்தை பதிவிடு


Natarajan Ramanathan
செப் 21, 2025 20:14

ஒரு சுடுகாட்டை அங்கீகரித்தால் என்ன அங்கீகரிக்காவிட்டால் என்ன? அதனால் ஒரு பயனும் இல்லை.


முக்கிய வீடியோ