உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுனிதா வில்லியம்ஸை அழைத்து வரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார்: எலான் மஸ்க் குற்றச்சாட்டு

சுனிதா வில்லியம்ஸை அழைத்து வரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார்: எலான் மஸ்க் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: '' விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவது தொடர்பாக முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டது,'' என ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ., எலான் மஸ்க் கூறியுள்ளார்.கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ' ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k9ieugm7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விண்வெளி வீரர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வந்த ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா குழுவினருக்கு பாராட்டுகள். இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளித்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

அர்த்தமில்லாதது

முன்னதாக டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் எலான் மஸ்க் கூறியதாவது: விண்வெளி வீரர்களை பத்திரமாக அழைத்து வர தயார் என முன்னரே கூறினோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. 8 நாட்கள் மட்டுமே அவர்கள் விண்வெளியில் இருந்து இருக்கவேண்டும். ஆனால், 10 மாதங்கள் இருந்தனர். இதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்னரே ஸ்பேஸ் எக்ஸ் மூலம் அவர்களை அழைத்து வந்திரப்போம். இதற்கான கோரிக்கையை ஜோ பைடன் நிர்வாகத்திடம் வைத்தோம். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டது. இது தான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக கடந்த ஜனவரி மாதமும், எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், ' ஜூன் 2024 முதல் விண்வெளியில் சிக்கி உள்ள வீரர்களை மீட்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார். இத்தனை நாட்கள் அவர்களை விண்வெளியில் வைத்திருந்தது மோசமானது எனக்கூறியிருந்தார். இதனை டிரம்ப்பும் உறுதி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Appa V
மார் 19, 2025 21:25

நல்ல வேலை நான் தமிழ்நாட்டில் இருந்து போகவில்லை.. அப்படி போயிருந்தால் அப்பா ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்..


M Ramachandran
மார் 19, 2025 20:10

பைடன், நமக்கென்ன என்று இறுமாந்திருந்தார். அந்த செலவில் கெளன்சிக்கி உதவலாம் என்று எண்ணம்


Easwar Kamal
மார் 19, 2025 18:29

ஒன்னும் இல்லாததற்கு யானை விலை கேப்பீங்க . இந்த சுனிதாவை அழைத்து வருவதற்கு என்ன அமௌன்ட் கேட்டீங்களோ? அதான் biden கிடப்புல போட்டு இருக்கலாம். இப்போ டிரம்ப் freeya கூட கூட்டிட்டு வந்து இருக்கலாம்.


என்றும் இந்தியன்
மார் 19, 2025 17:52

அறிவிலி அமெரிக்கா??? பைடன் உள்ளவரை சுனிதாவை அழைத்து வர எண்ணம் இல்லை??? டிரம்ப் வந்தார் சொன்னார் அழைத்துவந்தார்???இவ்வளவு கேவலமான அமெரிக்கா மிக மிக நல்ல உயரிய தேசம் என்று எல்லோரும் பாராட்டுவது????9 மாதம் அம்போ என்று விண்வெளியில் விட்டுவிடுவார்களாம் இதெல்லாம் மக்கள் வாஸும் தேசமா என்னா???


Rangarajan Cv
மார் 19, 2025 17:49

Shocking revelation. One should read about how biological trouble erupts in the body by staying in space despite 16layer suits. Conscious or unconscious decision- this is against humanity who were in NASA mission. Hope they are safe


Natarajan Mahalingam
மார் 19, 2025 17:37

பத்த வச்சிடியியே பரட்டை


Srinivasan Krishnamoorthi
மார் 19, 2025 17:18

Mr Musk Do not politicize space missions Even ISS is managed by USA & RUSSIA


Srinivasan Krishnamoorthy
மார் 19, 2025 17:39

not trumps administration dealing with isi, iss. in fact trump is working to finish isi, isis, Khalistan. Elan Musk is right in pointing the inefficiency and political objective of Biden government. now everything is coming to light.


முக்கிய வீடியோ