உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தண்ணீர் திறந்து விடுங்கள்: இந்தியாவிடம் பாக்., கெஞ்சல்

தண்ணீர் திறந்து விடுங்கள்: இந்தியாவிடம் பாக்., கெஞ்சல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சிந்து, ஜீலம், செனாப் நதிகளில் இருந்து நீரை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை நம் படைகள் அழித்தன. அதற்கு முன் உடனடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் வகையில் சிந்து நதி குறுக்கே அணை கட்ட முடிவு செய்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்தியா - பாகிஸ்தான் இடையே 1960ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஆறு நதிகளை உள்ளடக்கியது. அவை கிழக்கு நதிகள் மற்றும் மேற்கு நதிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு நதிகளில் சட்லஜ், பியாஸ், ராவி ஆகியவை உள்ளன. இந்த மூன்று நதிகளின் நீரின் உரிமையும் முழுமையாக இந்தியா வசம் உள்ளது. மேற்கு நதிகளில் சிந்து, ஜீலம், செனாப் உள்ளன. சிந்து நதி ஒப்பந்தத்தின்படி, 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு கிடைத்து வந்தது. தற் போது இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்லவில்லை. மேலும், இந்தியா புதிய அணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலவல் புட்டோவும், அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என, மிரட்டல் விடு த்தனர். இந்நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும்படி இந்திய அரசுக்கு வலியுறுத்துகிறோம். சிந்து, செனாப், ஜீலம் ஆகிய மேற்கு நதிகளின் கீழ் பகுதியில் பாகிஸ்தான் இருப்பதால், அந்த நதிகளில் எங்களுக்கே உரிமை அதிகம் என சர்வதேச மத்தியஸ்த நீதிமன்ற ம் கூறியுள்ளது. பாக்., பகுதிகளுக்கு நீர் பாய இந்தி யா அனுமதிக்க வேண்டும் என, மத்தியஸ்த நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி நீரை திறக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியா எப்போதும், சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றத்தின் வழக்கு நடைமுறைகளையோ அல்லது தீர்ப்புகளையோ அங்கீகரித்ததில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ