உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கொலம்பியாவில் இடிந்து விழுந்தது தங்கச் சுரங்கம்: தொழிலாளர்கள் 20 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்

கொலம்பியாவில் இடிந்து விழுந்தது தங்கச் சுரங்கம்: தொழிலாளர்கள் 20 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொகாட்டோ: வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.தென் அமெரிக்க கொலம்பியாவில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கச் சுரங்கங்களில் பணியாற்றி வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டு மட்டும் 6.6 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டது. அதேநேரத்தில், சட்டவிரோதமாக இயங்கி வரும் சில தங்க சுரங்கத்தில் விபத்துகளும் நிகழ்கிறது. அந்த வகையில், வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் கொலம்பியாவில் ஒரு சட்டவிரோத சுரங்கத்தில் ஏழு சுரங்கத் தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. சிக்கிய தொழிலாளர்களை அடைய மீட்புக் குழுக்கள் ஒன்பது நாட்கள் ஆனது. சுரங்கத்தில் 9 நாட்கள் மீட்பு படையினர் போராடி, உயிரிழந்த தொழிலாளர்கள் 7 பேரின் உடலை மீட்டனர். தற்போது மீண்டும் ஒரு சுரங்க விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Thravisham
செப் 24, 2025 15:23

மற்றுமொரு சிலியா? கீழே போன பொணம் மேலே வந்தா பணம்


m.arunachalam
செப் 24, 2025 12:53

நம்மை ஏழையாக வைத்திருக்க உதவும் ஒரு கருவி தான் தங்கம்.


Indian
செப் 24, 2025 09:42

தங்கத்தை தேடி ஏழை தொழிலாளர்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள். லஞ்சப்பேய்கள் நோகாமல் வாங்கி குவிக்கிறார்கள்


Ramesh Sargam
செப் 24, 2025 11:07

ஆமாம், நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இதில் நகை வியாபாரிகள் செய்கூலி, சேதாரம் என்று ஏமாற்று வேலை.


புதிய வீடியோ