உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!

பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்' அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்து உள்ளது.கடந்த ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்' அமைப்பு பொறுப்பேற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=47e3qd90&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பஹல்காமில் பயங்கர தாக்குல் நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த, இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது, பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்' அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்து உள்ளது.இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று வெளியுறவுத்துறை, தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும், உலகளாவிய பயங்கரவாதியாகவும் சேர்க்கிறது. இந்த பயங்கரவாத அமைப்பு ஐ.நா.வால் பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி அமைப்பாக இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M Ramachandran
ஜூலை 18, 2025 13:14

எந்த மதமும் தீவிர வாதத்தை ஆதரிக்காது. தீவிரவாத மனம் கொண்டா மதவாதிகள். முதுகெலும்ம்பு இல்லாத கும்பல் கீழ் தர குணமுடைய சில அயாக்கியர்கள் கொடுக்கும் பணத்திற்கு இச்சையாகி திரும்பி நிற்பவர்கள். இதைய்ய கண்டிக்காத இப்படி இருக்க இஸ்ரேல் நேரிடையாக காசாவை தாக்குவதற்கு மட்டும் கூக்குரல் கொடுத்து அழுவானேன்?


கண்ணன்
ஜூலை 18, 2025 11:30

ஆச்சா, இனி அதன் தலவர்களை அழத்து ஒரு விருந்து வைத்து விடுவார், ட்ரம்ப்


Sudha
ஜூலை 18, 2025 11:29

ஓஹோ, போர் விமானங்கள் வாங்கியதற்கு நன்றியாகவா?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 18, 2025 11:22

பெயரை மாற்றிக்கொண்டு செயல்படுவார்கள் ..... அவ்வளவுதான் விஷயம் ...... இதனாலெல்லாம் இந்தியாவை கூல் பண்ண முடியாது .......


Ganapathy
ஜூலை 18, 2025 09:56

எல்லாம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகத்தான்..


ASIATIC RAMESH
ஜூலை 18, 2025 09:20

இது ஒரு விஷயமா.... அப்புறம் என்ன... பெயரை மாற்று .... நானே அரசாங்கத்தின் மூலம் உதவிசெய்கிறேன் என்பான் இந்த பேரிக்கா ... வீட்டோ நாடுகளை எதிர்பார்க்காமல் அந்தந்த நாட்டு தலைவர்கள் சுய சார்புடன் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே சரியாகும்...


நிக்கோல்தாம்சன்
ஜூலை 18, 2025 07:44

அவங்க தமிழகத்தில் வேறொருவரை அப்பா என்று கூப்பிடும் அளவிற்கு பெயர் மாற்றத்தில் ஊறி திளைத்தவர்கள் , அவர்களிடம் பெயரை அறிவித்தால் போதுமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை