உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜனவரி தமிழ் மொழி மாதம் அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்

ஜனவரி தமிழ் மொழி மாதம் அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்

வாஷிங்டன் ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக்கோரி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 15 எம்.பி.,க்கள் அமெரிக்க பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அமெரிக்காவில், இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்குள்ள பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை ஆண்டுதோறும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக்கோரி, அந்த நாட்டு பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 எம்.பி.,க்கள் தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:அமெரிக்கவாழ் தமிழன் என்ற முறையில், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை போற்றும் வகையில் இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் அடைகிறேன். அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகள், கலாசாரங்கள், கருத்துக்கள், மரபுகளின் இடம். இந்தத் தீர்மானம் அமெரிக்காவில் வாழும் 3,50,000-க்கும் அதிகமான தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ராஜா கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து, அமெரிக்கவாழ் இந்தியர்களான ரோ கன்னா, அமி பெரா, ஸ்ரீதானேதர், பிரமிளா ஜெயபால் மற்றும் சுஹாஸ் சுப்ரமணியம் ஆகியோரும், சில அமெரிக்க எம்.பி.,க்களும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

K V Ramadoss
ஜன 20, 2025 02:26

இதை முன்னெடுத்து செல்லும் திரு ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஈ.வே.ரா வெறுத்த இனத்தை சேர்ந்தவர்.


Ramesh Sargam
ஜன 19, 2025 13:33

எனக்கு தெரிந்து இன்றைக்கு அமெரிக்காவில் தெலுகு பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் அடுத்து என்ன கோரிக்கை வைப்பார்களோ? எதையாவது வைக்கட்டும். ஆனால் அமெரிக்கா வாழ் அனைத்து இந்தியர்களும் ஒற்றுமையாக வாழுங்கள். அது ஒன்றே போதும். அதுவே சிறப்பானது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 19, 2025 10:05

எங்க சொறியான் மட்டும் இல்லன்னா இந்தப் பெருமையெல்லாம் கிடைக்குமா ??


Rajan A
ஜன 19, 2025 08:52

இப்படியே செய்து கொண்டுருந்தால் அமெரிக்கர்கள் சும்மா இருப்பார்களா? டப்பி சாத்தி கிளம்புனு அனுப்பிடுவாங்க. அப்புறம் சோத்துக்கு என்ன செய்வார்கள்?


Minimole P C
ஜன 19, 2025 08:50

By doing so, they have to explain the advantages they get, otherwise it is not necessary as here already attempts are being made to dilute the great Indian almanac/panchagam particularly at TN.


Sampath Kumar
ஜன 19, 2025 08:47

நல்ல முயற்சி வரவேற்க்கின்றன் பாராட்டுக்கள்


Kasimani Baskaran
ஜன 19, 2025 07:14

அருமை. பெரியார் மட்டும் இல்லை என்றால் இதெல்லாம் சாத்தியமில்லை என்று உருட்ட நாலு தத்திகள் வருவார்கள்...


Balasubramanian
ஜன 19, 2025 06:08

அடப் போய்யா! உலகெங்கும் இந்துக் கோயில்கள் கட்டி மகிழ்ந்தான் தமிழன்! இங்கே பொங்கல் பண்டிகையை பிரியாணி பண்டிகையாக மாற்ற முயற்சி நடக்கிறது! இதில் நீ வேறு சேர்ந்து குழப்பம் ஏற்படுத்த வேண்டுமா?


கோமாளி
ஜன 19, 2025 04:38

தமிழன் புத்தாண்டை ஜனவரி 14க்கு மாற்ற உலகம் முழுக்க முயற்சி. வேற ஒன்றும் இல்லை


Barakat Ali
ஜன 19, 2025 12:20

தமிழன் பாரம்பரியத்தை, கலாச்சார விழுமியங்களை எந்த சதியாலும் மாற்ற முடியாது .........


Ganesh
ஜன 19, 2025 03:01

பெருமையாக உள்ளது... நமது பாரம்பரியம், கலாச்சாரம் தான் நம் முதுகெலும்பு.. வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை