உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் வெடித்த கலவரம்; கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் உத்தரவால் பரபரப்பு

அமெரிக்காவில் வெடித்த கலவரம்; கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் உத்தரவால் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஸ்சல்ஸில் வெடித்த கலவரத்தால், புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன. இந்நிலையில், அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு காலத்தில் சிறந்த அமெரிக்க நகரமாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ், சட்டவிரோத குடியேறிகளாலும், குற்றவாளிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இப்போது வன்முறை, கிளர்ச்சி கும்பல்கள் எங்கள் நாடு கடத்தல் நடவடிக்கைகளை நிறுத்த தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சட்டவிரோத கலவரங்கள் எங்கள் உறுதியை வலுப்படுத்துகின்றன. உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அட்டர்னி ஜெனரல் பாண்டி ஆகியோர், மற்ற அனைத்து தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, லாஸ் ஏஞ்சல்ஸை புலம்பெயர்ந்தோர் படையெடுப்பிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ய வேண்டும். கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் உத்தரவிட்டு உள்ளேன். லாஸ் ஏஸ்சல்ஸில் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்படும். சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப் படுவார்கள். அவர்களின் பிடியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் விடுவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., காஷ் படேல் கூறியதாவது: ஒரு போலீஸ்காரரை தாக்கினால் நீங்கள் சிறைக்கு செல்ல நேரிடும். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? எப்படி இங்கு வந்தீர்கள் அல்லது எந்த இயக்கம் உங்களுக்கு பின் ஆதரவாக இருக்கிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. உள்ளூர் போலீசார் கூறுவதை நீங்கள் கேட்கவில்லை என்றால், நாங்கள் விசாரிக்க நேரிடும். இவ்வாறு காஷ் படேல் எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜூன் 09, 2025 11:51

இந்தியாவிலும் அதுபோன்று கடும் நடவடிக்கை எடுத்து பாகிஸ்தான், வங்கதேசம், பர்மா போன்ற நாட்டிலிருந்து வந்த வந்தேறிகளை உடனே அவரவர் நாடுகளுக்கு துரத்தவேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 09, 2025 11:49

புலம்பெயர்ந்தோர்களில் இந்தியர்களும் இருக்கக்கூடும். அவர்கள் டிரம்ப் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே பத்திரமாக தாயகம் திரும்புவது நல்லது.


Ramalingam Shanmugam
ஜூன் 09, 2025 10:47

ஊருக்கு உலை வைத்தாய் உனக்கே வைத்து விட்டார்கள்


VENKATASUBRAMANIAN
ஜூன் 09, 2025 07:51

சபாஷ் நல்ல நடவடிக்கை. இங்கே மதசார்பற்ற என்ற பெயரில் குடியேறும் நபர்களை காப்பாற்றி வரும் சில கட்சிகள். அதே நடவடிக்கை இங்கேயும் தேவை. அதற்காக சிஐஏ கொண்டுவந்தார்கள் ஆனால் அதையும் எதிர்க்கும் கட்சிகள். இந்தியா இப்போது தர்ம சத்திரம் போல்ட் ஆகிவிட்டது.


புதிய வீடியோ