உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புதிய அரசுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டில் கலவரம்

புதிய அரசுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டில் கலவரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் புதிய அரசு பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. இதுவரை 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தலைமையிலான அரசு இரண்டு நாட்களுக்கு முன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து பிரதமர் ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக ராணுவ அமைச்சர் லெகர்னுவை அதிபர் இமானுவேல் மேக்ரோன் நியமித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=htijjm0o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவ்வாறு புதிய புதிய பிரதமர் நியமனம் செய்வதற்கும், அரசின் செலவுகளை சிக்கனமாக செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைனில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவ்வாறு அறிவிக்கப்பட்ட போராட்டங்களில் பலர் நேரடியாக களம் இறங்கினர். நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்தை வழிமறிக்கும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டன.மக்கள் கூட்டமாக கூடுவதை தடுத்த போலீசார், முன்னெச்சரிக்கை செய்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். நாட்டின் மேற்கு பகுதி நகரமான ரென்ஸ் நகரில் பஸ் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வின் வினியோக தொடர் அமைப்பு சேதப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் புருனோ தெரிவித்துள்ளார்.போராட்டத்துக்கு யாரும் தலைமை தாங்காமலேயே நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் பிரான்ஸ் நாட்டில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sampath
செப் 10, 2025 21:25

பகலவன் பாவம் மலையை பார்த்து குரைக்கிறார் பிறவி குணம்


திகழ்ஓவியன்
செப் 10, 2025 19:06

ராகுல் அவர்களே திஸ் IS தி RIGHT TIME TO கெட் DEEAILS , ரபில் கமிஷன் FROM புதிய அரசிடம்


Modisha
செப் 10, 2025 21:24

அப்படியே கைக்கூலி அவர்களே , நீங்களே போய் வாங்கிட்டு வாங்க .


பேசும் தமிழன்
செப் 10, 2025 18:07

ஆஹா.... மார்க்க ஆட்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள் போல் தெரிகிறது..... அவர்களை உள்ளே விடும் நாடுகள் பின்னாளில் சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.


MARUTHU PANDIAR
செப் 10, 2025 18:06

மோடியுடன்/இந்தியாவுடன் சுமுகமாக ஒரு நாடு நடந்து கொண்டால் அடுத்த நிமிடம் சி ஐ ஏ தன் கொடூர முகத்தை காட்டுகிறான். கோர தாண்டவத்தை ஆரம்பித்து விடுகிறான். .


Kalyan Singapore
செப் 10, 2025 17:49

சஞ்சய் ராவத் பல கனவுகள் காண்பார் . உத்தவ் தாக்கரே பிரதமராக வருவதாகவும் அதில் ராவத் நிதி மற்றும் உள்துறை யமைச்சராக வருவதாகவும் அத்தகைய கனவுகளில் இந்தியாவில் கலவரமும் ஒன்று


pakalavan
செப் 10, 2025 17:34

மோடி எங்கெல்லாம் போனாரோ அங்கெல்லாம் இப்படதான் ஆகுது, ஜப்பான் நேப்பாளம் இப்போ பிரான்ஸ்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 10, 2025 18:31

மோடிஜி கனடாவில் ஜி7 உச்சி மாநாடு , பிரேசில், சீனா, காணா நாட்டிற்கெல்லாம் தான் சென்றார்.....அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சு போடாதீங்க.....என்ன தான் வேனும் உங்களுக்கு....பேசாம மோடிய அந்தமானுக்கு அனுப்பிட்டு இந்தியாவ பாகிஸ்தானோட இணைச்சிட்டு ஷெபாஸ் ஷெரீஃபை பிரதமர் ஆக்கிடுவோமா ????


SUBRAMANIAN P
செப் 10, 2025 17:10

என்னடா இது.. உலகம் எங்கே செல்கிறது... ஒரு பக்கம் நேபாளம்.. இன்னொரு பக்கம் பிரான்ஸ்..


Artist
செப் 10, 2025 17:08

இந்தியாவிலும் இந்த நிலைமை வர வாய்ப்பிருப்பதாக சஞ்சய்ராவுத் பேட்டி


nagendhiran
செப் 10, 2025 16:54

சுட்டு தல்லுங்க?


Artist
செப் 10, 2025 17:06

மப்புல எழுத வேண்டாமே


சமீபத்திய செய்தி