உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போலந்தை தொடர்ந்து ருமேனியாவிலும் ஊடுருவிய ரஷ்ய டிரோன்

போலந்தை தொடர்ந்து ருமேனியாவிலும் ஊடுருவிய ரஷ்ய டிரோன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புக்காரெஸ்ட்: போலந்தை தொடர்ந்து மற்றொரு ஐரோப்பிய நாடான ருமேனியாவிலும் ரஷ்ய டிரோன் ஊடுருவி சென்றது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், போலந்து வான்வெளியில் ரஷ்ய டிரோன்கள் அத்துமீறி நுழைந்தன. இதனை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. போலந்து வான்வெளியை பாதுகாப்பதற்கு உதவும் வகையில் ரபேல் விமானங்களை பிரான்ஸ் அனுப்பி வைத்தது.இந்நிலையில் ருமேனியா வான்வெளியிலும் ரஷ்ய டிரோன் அத்துமீறி நுழைந்துள்ளதாக அந்நாடு குற்றம்சாட்டி உள்ளது. இதனை போர் விமானங்கள் மூலம் கண்காணித்ததாகவும், உக்ரைனின் எல்லை அருகே இந்த டிரோன் காணப்பட்டதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. சிலியா வெச்சே பகுதியில் முதலில் காணப்பட்ட இந்த டிரோன் பிறகு ரேடாரில் இருந்து மறைந்து விட்டதாகவும், அதேநேரத்தில் மக்கள் நிறைந்த பகுதிகளில் இந்த டிரோன் காணப்பட்டதாகவும், அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.அதேநேரத்தில் இந்த டிரோன் தவறுதலாக ருமேனியாவிற்குள் நுழைந்து இருக்காது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramaraj P
செப் 16, 2025 02:05

உலகப் போர் வந்தால் அமெரிக்கா அழியும். உலகப் போரோ அல்லது அணு ஆயுத போரோ ஏற்பட வாய்ப்பு இல்லை. உக்ரைன் ரஷ்யா போர் உக்ரைன் எனும் நாடு இருக்கும் வரை நடக்கும். ஒரு நாள் உக்ரைன் ரஷ்யா என்று மாறும் அவ்வளவுதான்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 15, 2025 08:08

ஜெலன்ஸ்கி தான் நேட்டோ நாடுகளுடன் சேர்வது என்று முதலில் கூறினார். அப்படி நேட்டோ அமைப்போடு உக்ரைன் இணைந்தால் நேட்டோ நாடுகள் தங்கள் போர் தளவாடங்கள் உக்ரைனில் நிறுவும் அதனால் ரஷ்யா பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று ரஷ்யா நினைத்து உக்ரைனை நேட்டோ அமைப்போடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனால் உருவான போர் தான் இது. ஜெலன்ஸ்கிக்கு ராஜாங்க ரீதியாக அனுக அனுபவமில்லாத காரணத்தால் இந்த போர் நீண்டு கொண்டே செல்கிறது. ஆகவே ஜெலன்ஸ்கி தன் நாடு நாட்டு மக்களுக்கு ஆகவும் உலக நன்மைக்காகவும் ரஷ்யாவுடன் சமாதானமாக போவது நல்லது. இல்லை என்றால் வியட்நாமில் அமெரிக்க செய்தது போல உக்ரைனிலும் செய்யும். எப்படி வியட்நாம் பின்னர் இணைந்து ஒன்றானதோ அது போல உக்ரைனும் ரஷ்யாவுடன் இணைய வேண்டிய சூழல் கண்டிப்பாக ஏற்படும். சினிமா காரன் ட்ரம்ப் நம்பினால் ஜெலன்ஸ்கி நட்டாத்தில் நிற்க வேண்டிய தான்.


Nathan
செப் 15, 2025 03:39

உக்ரைன் அதிபர் உலக போரை நோக்கி ஐரோப்பிய நாடுகளை அழைத்து செல்கிறார் விளைவு மேற்குலகின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அனு ஆயுத தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளது இது தேவை தானா என்று சிந்தித்துப் பாருங்கள் ரஷ்யாவுடன் பேசி தீர்த்துக் கொள்ள உக்ரைனை வலியுறுத்த வேண்டும்


நிக்கோல்தாம்சன்
செப் 15, 2025 02:39

வெள்ளைக்காரன் பொய் சொல்லவே மாட்டான் என்று அலையும் காலிடுவேல் மக்கள் இனி வரும் நாட்களில் .....


MARUTHU PANDIAR
செப் 14, 2025 22:05

இவர்கள் ஓயவே மாட்டார்கள்.


முக்கிய வீடியோ