உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி

ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி

டோக்கியோ: ஜப்பானில் நடந்த மேலவை தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி உண்டாகியுள்ளது.ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சியும், கோமெயிட்டோ கூட்டணியும் ஆட்சியமைத்து வருகிறது. இந்த நிலையில், பார்லிமென்டின் மேல்சபைக்கு நேற்று (ஜூலை 20) தேர்தல் நடைபெற்றது. மேலவையின் 248 இடங்களில் பாதி இடங்களுக்கான தேர்தல் நடந்தது. ஆளும் கட்சிகளுக்கு மேலவையில் ஏற்கனவே 75 இடங்கள் உள்ள நிலையில், இன்னும் 50 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்ற வேண்டும். இந்த நிலையில், மேலவை தேர்தலில் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கீழவை தேர்தலிலும் பெரும்பான்னமையை இழந்துள்ளது. இதன்மூலம், 70 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக லிபரல் டெமாக்ரடிக் கட்சி எந்த அவைகளிலும் பெரும்பான்மையை பெறவில்லை. இருப்பினும், இஷிபா தனது பதவியில் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. ஏற்கெனவே விலைவாசி உயர்வு மற்றும் அமெரிக்காவின் வரிகள் போன்றவை பிரதமர் இஷிபாவுக்கு எதிர்வினையாற்றி இருப்பதாக குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !