உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் போரில் ரஷ்யா குற்றவாளி; மனித உரிமை நீதிமன்றம் உத்தரவு

உக்ரைன் போரில் ரஷ்யா குற்றவாளி; மனித உரிமை நீதிமன்றம் உத்தரவு

தி ஹேக்: உக்ரைனுக்கு எதிரான போரில், சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளது என, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது.ஐரோப்பிய நாடான பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், நேற்று இரண்டு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியது. உக்ரைன், நெதர்லாந்து ஆகியவை, ரஷ்யாவிற்கு எதிராக தொடுத்த வழக்குகளை இந்த நீதிமன்றம் விசாரித்து வந்தது.ஒன்று, உக்ரைன் மீதான போர் துவங்கியதிலிருந்து முழு அளவிலான படையெடுப்பின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்கு. மற்றொன்று, 2014ல் 298 உயிர்களை பலிவாங்கிய மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட வழக்கு.கடந்த 2014ல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தபோது கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் 196 நெதர்லாந்து பயணியர் உட்பட 298 பேர் இருந்தனர்.இந்த இரண்டு வழக்குகளிலும், சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளதாக, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது.கடந்த, 2022ல் நீதிமன்றத்தின் நிர்வாக அமைப்பு, ரஷ்யாவை நீக்கி உத்தரவிட்டது. அதனால் தற்போதைய உத்தரவுகள், ரஷ்யாவை கட்டுப்படுத்தாது.அதே நேரத்தில் ரஷ்யா மீதான புகார்களில் ஏற்கனவே விசாரணையை துவக்கியதால், இந்த நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. முழு விசாரணை நடந்துள்ளதால், ரஷ்யா மீது ஐ.நா., மனித உரிமை கமிஷன் உள்ளிட்டவற்றில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில், இந்த உத்தரவு தாக்கத்தை ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜூலை 10, 2025 15:01

வல்லான் வகுத்ததே வாய்க்கால். நாளைக்கி புடின் போனா யாரப்புடிப்பாங்க? இருக்கு பேசாம, ரஷ்யாவை சண்டையில் தோற்கடித்து, புட்டினை ஓரம் கட்டி, யஷ்யாவை நாலாப் பிரிச்சு வெக்கலாம். அதுதான் நடக்கும். அமெரிக்கா அதைச் செய்தால்தான் உலக அரங்கில் தலையெடுக்ஜ முடியும்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 10, 2025 07:22

இலங்கையில் சீனா, இலங்கை செய்தது, ஈரானில், வியட்நாமில் அமேரிக்கா செய்தது, கனடாவில் இந்தியர்களுக்கு எதிராக கனடா செய்தது, இந்தியர்களுக்கு எதிராக பிரிட்டன் செய்தது எல்லாம் தொண்டு நிறுவனங்களோ நீதிபதியே


Arul. K
ஜூலை 10, 2025 05:44

ஆனால் இலங்கையில் திட்டமிட்டே நடந்த இன அழிப்பை பற்றி ஒருவனும் வாய் திறக்கமாட்டானுங்க


Kasimani Baskaran
ஜூலை 10, 2025 03:38

தவறு ஐரோப்பிய ஒன்றியம் பக்கமும் இருக்கிறது - ஏனென்றால் அவர்கள்தான் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ள முயன்றார்கள்.


சமீபத்திய செய்தி