உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் மீது ரஷ்யா ஒரே நாளில் 800 டிரோன் ஏவி தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா ஒரே நாளில் 800 டிரோன் ஏவி தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, நேற்று ஒரே நாளில் 800 டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவே மிகப்பெரிய தாக்குதல் என தகவல் வெளியாகி உள்ளது.உக்ரைன், ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் ஒரு புறம் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. மறுபுறம் இரு நாடுகளும் ஒருவர் மீது மற்றொருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=az453w6i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கியது. இதில் இருவர் கொல்லப்பட்டனர், மேலும் ஒரு அரசு கட்டடத்தின் கூரை எரிந்து கரும் புகை எழுந்தது.இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறியதாவது:உக்ரைன் மீது 805 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதுநாள் வரையிலும் நடத்திய தாக்குதலில் இது எங்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் ஆகும்.ரஷ்யா, பல்வேறு வகையான 13 ஏவுகணைகளையும் ஏவியது. இந்த தாக்குதலின்போது, எங்களது படைகள், 747 ட்ரோன்களையும் 4 ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியது.உக்ரைன் முழுவதும் 37 இடங்களில் ஒன்பது ஏவுகணைத் தாக்குதல்களும் 56 ட்ரோன் தாக்குதல்களும் நடந்தன. சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் இடிபாடுகள் 8 இடங்களில் விழுந்தன.இதில் அரசு கட்டடம் பெரும் சேதம் அடைந்தது.இந்த கட்டிடம் உக்ரைன் அமைச்சரவையின் தாயகமாகும், அதில் அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வந்ததால், காவல்துறையினர் கட்டிடத்திற்குள் செல்வதைத் தடுத்தனர்.தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.இவ்வாறு யூரி இஹ்னாட் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Tamilan
செப் 08, 2025 00:02

நேற்றுதான் மோடி ஜெலன்சிக்கும் உத்தரவாதாமோ அனுதாபமோ தெரிவித்தார் . போர் முடிந்துவிடும் என்று. இன்று எப்போதும் இல்லாத அளவுக்கு . சீனாவில் அனைவருடனும் மோடியை பேசிய ரகசியம் என்ன?. அம்பானி அதானிகளின் கைப்பாவையாக கார்போரேட்டு கொள்ளைக்கூட கும்பலின் தலைவராக ஏஜெண்டாக இருந்துவிட்டு வந்தாரா ? இது நாட்டுக்கு உலகமெல்லாம் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்


அப்பாவி
செப் 07, 2025 17:39

இது போருக்கான நேரமில்லைன்னு சொல்லிக்குட்டிருக்கோம். கேக்க மாட்டேங்கறாங்க.


sankaranarayanan
செப் 07, 2025 17:23

அதுவே அடங்கிப்போயிருக்கிற நிலையில் இப்போதும் உக்ரைன் முழுவதும் 37 இடங்களில் ஒன்பது ஏவுகணைத் தாக்குதல்களும் 56 ட்ரோன் தாக்குதல்களும் நடந்தன இது அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையிட்டால் வந்த வம்பு அது தானாகவே அமைதியைக்கண்டிருக்கும் டிரம்பு அமைதியை கையாளுகிறேன் என்று சொல்லிட்டு, புடின் சொல்கிற வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டால் அமைதி உண்டாகும் என்றே சொல்லிவிட்டார் எதற்காக இவரிடம் ஜெலன்ஸ்கி உதவிக்கு சென்றாரோ தெரியவில்லை


Balasubramanian
செப் 07, 2025 15:31

வியட்நாம் வீடு மாதிரி உக்ரைன் flat ன்னு யாராவது தமிழ் சினிமா அல்லது டீவி சீரியல் எடுக்கிற வரை ஓய மாட்டேன் என்கிறார்களோ?


Artist
செப் 07, 2025 14:37

டிரம்பு இந்த போரை நிறுத்துவதில் அக்கறை செலுத்தவில்லை ..நோபல் பரிசு கிடைப்பது கானல் நீராகிவிடுமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை