உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கன் தலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா!

ஆப்கன் தலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியது. இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான செயல், பல்வேறு துறைகளில் நமது நாடுகளுக்கு இடையே உற்பத்தி ரீதியான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உத்வேகம் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலிபான்களால் நியமிக்கப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கையின் மூலம், 2021ல் தலிபான் தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து அதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா ஆனது.மாஸ்கோவில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்வில் ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனை சந்தித்தார். காபூலில் உள்ள தலிபான் அதிகாரிகள் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையைப் பாராட்டினர். மேலும் இது உறவுகளை வலுப்படுத்த உதவும். இது எங்கள் உறவுகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்' என்று தலிபானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் கூறினார்.ஆகஸ்ட் 2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரஷ்யா காபூலில் தனது தூதரகத்தைத் திறந்து வைத்துள்ளது. தலிபான் தலைவர்களுடன், ரஷ்ய அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.இதுவரை, வேறு எந்த நாடும் தலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. சீனா, பாகிஸ்தான் நாடுகள், தலிபான் அரசின் துாதரை ஏற்றுக் கொண்ட போதிலும், இதுவரை தலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Thravisham
ஜூலை 04, 2025 19:40

பாகிஸ்தானுக்கு செக் வைக்க பட்டும் படாமலும் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு உதவிகள் செய்யலாம்


krishnan
ஜூலை 04, 2025 18:28

india should consider recognize ஆப்கான். b selfish


Sivagiri
ஜூலை 04, 2025 13:18

ரஷ்யாவும் - அமெரிக்காவும் - இஸ்லாமிய தீவிரவாதிகளை ஆதரிப்பார்கள் - ஆனால் ஒரே வித்தியாசம் - இஸ்லாமிய தீவிரவாதிகள் அவர்கள் நாட்டிலேயே இருந்தால் ரஷ்யா ஆதரிக்கும் - - ஆனால் தாங்கள் சொல்லும் நாடுகளில் நுழைந்து தாங்கள் இட்ட கட்டளையை செய்தால் அமேரிக்கா ஆதரிக்கும் . . . ரஷ்யாவை உடைத்ததும் அப்படித்தான் . . .


Ramesh Sargam
ஜூலை 04, 2025 12:13

ரஷ்யா தயாரித்து வீணாக போகும் ராணுவ தளவாடங்களை ஆப்கானிஸ்தானுக்கு விற்க இப்படி ஒரு அங்கீகாரம். அடுத்து அமெரிக்காவும் இதுபோல அங்கீகரிக்கும்.


புதிய வீடியோ