உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியது ரஷ்யா

 ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியது ரஷ்யா

டெஹ்ரான்: ஈரானுக்கு அவசர உதவியாக ரஷ்யா தன் அதிநவீன ராணுவக் கட்டுப்பாட்டு விமானத்தை அனுப்பியுள்ளது, சர்வதேச அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து உள்ளது. இந்த சூழலில், ஈரானுக்கு ரஷ்யா ராணுவ உதவியை செய்துள்ளது. ரஷ்ய அதிபர் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அவசர காலத்தில் வானில் இருந்தபடியே போரை வழிநடத்த பயன்படுத்தும் 'டி.யு.-214பி.யு.,' என்ற வான்வழி கட்டளை மைய விமானம், ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ரஷ்யா விடுத்துள்ள நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. வழக்கமான பயணியர் விமானம் போல் தோற்றமளித்தாலும், 'டி.யு. -214பி.யு.,' விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள ரஷ்ய தொழில்நுட்பம், தரைவழி தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டாலும், செயற்கைக்கோள் மற்றும் அதிநவீன ரேடியோ அலைவரிசைகள் மூலம் பாதுகாப்பான முறையில் ராணுவக் கட்டுப்பாட்டை தொடர அனுமதிக்கும். ம ணிக்கு 850 கி.மீ., வேகத்தில், தொடர்ந்து 6,500 கி.மீ துாரம் வரை பயணிக்கும் திறன் கொண் டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Techzone Coimbatore
ஜூலை 14, 2026 18:32

ஐந்தறிவு உள்ள தெருநாய், பன்றி, எருமை போன்ற உயிரினங்களை கேவலமாக பார்க்கும் மனித சமுதாயம், இங்கு நாட்டுக்குநாடு நடக்கும் போர்களால் எவ்ளோ பாதிப்புகள் , இயற்கை சீரழிவுகள் என்று உலகம் முழுக்க, ஏன் ஆறறிவு உள்ள மனிதனால் ஏன் இது போல் வன்மம், வெறுப்பு சக மனித மேல் காட்டுவது சரியா? அதிகாரம், பணம், புகழ், மதம், ஜாதி போன்றவை மனிதனுக்கே உரிய கேவலமான குணங்கள், நாம் குறைகூறும் நாய்களிடம் இந்த குணங்கள் இல்லை. இப்போது கூறுங்கள் யார் கேவலமான இனம்


Nachi
ஜூலை 14, 2026 16:34

நீங்க சொல்வது சரிதான். இளையராஜா அவரது உரிமைக்கு போராடுகிறார். ஆர் ரஹ்மான் முதலில் இருந்தே இதை செய்வதால் , தெரியவில்லை. ராஜா லேட்டாக ஆரம்பித்தார் அதனால் தெரிந்தது. வருமானத்தில் ஒரு பகுதி இசை கலைஞர்கள் சங்கத்திற்கு போகிறது. TMS எப்போதும் படும்போது சில ராகங்கள் / ஹம்மிங் சேர்த்து பாடுவார். விசு /மகாதேவன் போன்றோர் அதை அனுமதித்தார்கள். ராஜா அதை ஏற்கவில்லை, சொன்னபடி மட்டும் பாடினால் போதும், என்றார். இதுதான் ப்ரோப்லம். சுசீலாவுக்கும் ராஜாவுக்கும் எந்த சண்டையும் இல்லை. ராஜாவின் அன்னக்கிளி படத்தில் பாட சுசீலா நேரம் இல்லை என்று சொல்லி மருத்து விட்டார். ஜானகி ஒத்துழைத்தார், அதனால் ஜானகிக்கு நிறைய வாய்ப்புகள் அவ்வளவே. LRஈஸ்வரி முதலில் ராஜாவுக்கு அன்னக்கிளியில் பாடினார், பாடிய பிறகு ராஜாவை ஏளனமாக ஏதோ பேசிவிட்டார். அதனால் ராஜா ஜானகியை அன்னக்கிளிக்கு பயன்படுத்தினார். அதனால்தான் கடைசிவரை LRkku வாய்ப்பே வழங்கவில்லை. முதலில் ராஜா ஆஃப்ரொஞ்ச் பண்ணியது சுசீலா, ஈஸ்வரி அப்புறம் ஜானகி. இது நிறைய பேருக்கு தெரியாது.


Barakat Ali
ஜூலை 14, 2026 10:38

இருந்தாலும் இது உலகப்போராக மாறாது ........


nmdevan2006@yahoo.co.in
ஜூலை 14, 2026 09:32

உலக நாடுகள் ஈரான்,அமெரிக்கப் போரை வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு கடிந்து நடவடிக்கை எடுக்க இருநாடுகளையும் கூடவே இஸ்ரேலையும் கண்டித்து ஐநா சபையில் தீர்மானம் இயற்ற வேண்டும்.இவர்களால் உலகமக் கள் இன்னல்களுக்கு ஆகவேண் டுமா ? இதுதான் ஐ.நா.சபை மக் களுக்காக ஆற்றும் நன்மையா ? இனிமேல் இந்த நாடுகளைப் புறக் கணித்தால் ஒழிய இவர்கள் என்று மே திருந்த மாட்டாங்க உலகம் அமைதியாக வேண்டுமா இல்லை இவர்களால் அவதிப்பட வேண்டுமா ? உலக ஒற்றுமை வேண்டும். அதற்காக பாடுபடப் பாருங்கள்


Keshavan.J
ஜூலை 14, 2026 07:34

எனக்கும் ரஷ்யாவை பிடிக்கும் ஆனால் ரஷ்யா ஏன் இந்த மேம்பட்ட தொழில்நுட்ப இராணுவக் கப்பலை உக்ரைனுக்கு எதிராகப் போரிடப் பயன்படுத்த முடியாது என்பது எனக்கு ஒரு சந்தேகமாக உள்ளது.


Barakat Ali
ஜூலை 14, 2026 10:37

உக்ரைன் மக்கள் / ராணுவம் தங்கள் தலைமையின்மீது சலிப்படையும் வரை ரஷ்யா போரை இழுக்கிறதோ என்கிற சந்தேகம் எனக்கு உண்டு .....


Anand
ஜூலை 14, 2026 11:19

அமெரிக்கா ஈரான் போர் என்பது ஒன்றை ஒன்று அழிக்க துடிப்பது, ஆனால் ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவது உக்ரைனை அழிக்க அல்ல, காரணம் ரஷ்ய உக்ரைனின் பகுதிகளை முடிந்தளவு கையகப்படுத்தி தன்னுடன் சேர்த்துக்கொள்ள விரும்புகிறது, எனவே அது மிக கவனமாக முடிந்தளவு பொது சேதத்தை உண்டாக்காமல் உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து தாக்குகிறது. போதாக்குறைக்கு நேட்டோ நாடுகள் தங்களின் மேம்பட்ட அதிநவீன போர்க்கருவிகளை உக்ரைனுக்கு கொடுத்து மறைமுகமாக போரை நடத்துகிறது. எனவே ரஷிய முடிந்தளவு தற்காப்பு யுக்திகளையும் கையாள வேண்டியுள்ளது.


Keshavan.J
ஜூலை 14, 2026 07:31

உதயநிதி போன்ற ஒரு பயனற்ற நபரைப் பற்றிப் பேசி உங்கள் இரண்டு நிமிட நேரத்தை வீணடித்துவிட்டீர்கள். மீண்டும் சொல்கிறேன், தயவுசெய்து இளையராஜாவை விமர்சிக்காதீர்கள். இந்தப் பிரச்சினைகளின் பின்னணியைச் சரிபாருங்கள். அவருடைய 80% பாடல்களுக்குக் காப்புரிமை இருப்பதால் அவர் நீதிமன்றத்திற்குச் செல்கிறார். படம் எடுக்க காப்புரிமை பெற்ற மற்ற சினிமா தயாரிப்புகளைப் போலவே இதுவும் அவருடைய சட்டப்பூர்வ உரிமை. உதாரணமாக, நீங்கள் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறீர்கள், அதை வேறு யாராவது வெளியிட்டு லாபம் உண்டாக்கினால் , நீங்கள் சும்மா இருப்பீர்களா? திரைப்படத்தின் பெயர் காப்புரிமை பெற்றது, கதை காப்புரிமை பெற்றது, ஏன் நம் நாட்டின் மஞ்சள் அமெரிக்காவில் காப்புரிமை பெற்றது? இந்தியா அதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. காப்புரிமை என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், பிறகு இசை ஞானி இளையராஜாவைப் பற்றிப் பேசுங்கள். இன்னொரு விஷயம், டிஎம்எஸ் ஒரு பெரிய மூத்தவர் போல , ரெக்கார்டிங் ஸ்டுடியோவிலும் நடந்துகொண்டதால் அவர் டிஎம்எஸ்-க்கு பாடல் கொடுப்பதை நிறுத்திவிட்டார். அவர் ஸ்டுடியோவுக்குள் புதியவரான இளையராஜாவைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருந்தார். இதனால்தான் இளையராஜா அவருக்குப் பாடல் கொடுப்பதை நிறுத்திவிட்டு, எஸ்.பி.பி., ஜேசுதாஸ், ஜானகி, ஜெயச்சந்திரன் போன்ற மூத்த கலைஞர்களுக்கும் மற்றும் பல புதுமுகங்களுக்கும் வாய்ப்பளித்தார். அவருக்கும் மூத்த கலைஞர்களுக்கும் இடையே இருந்த ஈகோ மோதல் காரணமாக, அவர் சுஷீலா அம்மாவை கூட மிகச் சில பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்தினார். இப்பவும் சொல்லுகிறேன் காப்புரிமையால் வரும் பணத்தை கொண்டு நலிந்த இசைக்கலைஞர்கள்களுக்கு பண உதவி செய்கிறார்


raja
ஜூலை 14, 2026 07:20

பிறப்பால் தீவிரவாதி களாய் வளரும் தீவிரவாதிகளுக்கு ரஷ்யா உதவுவது இந்தியர்களுக்கு பிடிக்க வில்லை.....


அப்பாவி
ஜூலை 14, 2026 06:41

உக்ரைனுக்கு patriot ஏவுகணைகள் தயாரிக்க ட்ரம்ப் அனுமதி கொடுத்தாச்சு. புட்டின் காண்டாயி இரானுக்கு சப்போர்ட். இது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கு மான போர். இரான் பகடைக் காய். அடி வாங்குது.


Kasimani Baskaran
ஜூலை 14, 2026 03:45

ஈரானின் வான் வெளிக்குள் யார் வேண்டுமானாலும் போய் வர முடியும் என்று ஆகிவிட்டது.


Parivel
ஜூலை 14, 2026 02:14

யாரும் இங்கே நல்லவர்கள் இல்லை நாட்டு தலைவர்களுக்கு பைத்தியம் பிடித்து விடுவதால் உலக மக்கள் பாதிக்க படுகிறார்கள்.....தீவிரவாத சிந்தனைகளை முதலில் விதைக்கும் கலாச்சாரம் மனித இனத்தில் இருந்து ஒழிக்க பட வேண்டும்